பக்கம் எண் :

  நாட்டுப் படலம்27

   2. நாட்டுப் படலம்
 

கோசல    நாட்டின்      வளத்தை / சிறப்பைக் கூறும் படலம் என
விரியும்.  நாடு:    நாட்டின் வளம் அல்லது சிறப்பு: இதனை ஆகுபெயர்
என்பர்.

கோசலநாட்டு    மக்களின்  பொழுதுபோக்கு. உழவர்களின் உயர்ந்த
வாழ்க்கை.  செல்வப்   பொலிவு.  பெண்டிர் பெருமை. நல்லன கொண்டு
அல்லன நீக்கி வாழும்  மக்களின்  பண்பு நலம். கலை வளர்ச்சி ஒழுக்க
நெறி   பேணும்    ஆடவர்   மற்றும்    மகளிரால்   அங்கு   அறம்
நிலைபெற்றிருத்தல்     போன்ற    பல    செய்திகள்   இப்படலத்தில்
விவரிக்கப்படுகின்றன.
 
                                          கோசலத்தின் வளம்
 

அறுசீர் விருத்தம்
  

32.

வாங்க அரும்பாதம் நான்கும்
   வகுத்த வான்மீகி அன்பான்.
தீம் கவி. செவிகள் ஆரத்
   தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு. அவன்புகழ்ந்த நாட்டை.
   அன்பு எனும் நறவம் மாந்தி.
மூங்கையான் பேசலுற்றான் என்னை.
   யான் மொழிய லுற்றேன்.
 

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த- எடுத்துவிடுவதற்கு அரிய
நான்கு    அடிகள்  கொண்ட  சுலோகங்களால் இராமாயணம் இயற்றிய;
வான்மீகி   என்பான்
-   வான்மீகி   முனிவர்   என்று  சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற   முனிவன்;   தேவரும்   செவிகள்  ஆரப்பருக-
தேவர்களும்  தம்  செவி  வாயாகப் பருகும்படி; தீம் கவி செய்தான்-
இனிய  அமுத  கவி  பெய்தான்;  ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை-
ஆதி   காவியத்தில்  அம்முனிவன்  புகழ்ந்துரைத்த  நாட்டை; அன்பு
எனும் நறவம் மாந்தி
-