இசைப் பயன் துய்ப்பாரும்- இயல் இசைத்த இசைப்பாடலை அனுபவிப்பவர்களும்; மருந்தினும் இனிய- அமுதத்தை விட இனிமை மிக்க; கேள்வி செவி உற மாந்துவாரும்- கேட்டறியும் நூலறிவினைச் செவியிற் பொருந்த உண்டு அனுபவிப்பவர்களும்; விருந்தினர் முகம் கண்டு- விருந்தினரின் முகத்தைப் பார்த்து; அன்ன விழா அணி விரும்புவாரும்- உண்ணும் சோறு வழங்கும் விழாவின் சிறப்பை விரும்புவாரும் இச் செய்யுளோடு வாக்கியம் முற்றுப் பெறவில்லை; மேலும் தொடர்கிறது (49 முடிய). இப்படி வரும் செய்யுளைக் குளகச் செய்யுள் என்பர். ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய பொருத்தங்கள் பத்து என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. (தொல். பொருள்-பொருளியல் 25) |