பக்கம் எண் :

  நாட்டுப் படலம்63

கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம்; நகரம் கூறுவாம்.
 

வீடு  சர  நீர்வேலை  கால்மடுத்து  ஊடு  பேரினும்  -  நிலம்
முழுவதும்  அழியுமாறு  கடல் பெருங்காற்றால் மோதுண்டு   வந்தாலும்;
உலைவு இலா
-அழியாத; நலம் கூடும் ‘கோசலம்’ என்றும் கோதிலா
நாடு  கூறினாம்  
-  நன்மைகள்  சேர்ந்த  கோசலம் என்று குற்றமற்ற
நாட்டின்  சிறப்பைச்  சொன்னோம்;  நகரம் கூறுமாம் -  (இனி) அந்த
நாட்டின்     தலைநகரான    அயோத்தி    மாநகரின்     சிறப்பைச்
சொல்லுவோம்.

வீடு  (விடுதலை)    -    முதனிலைத்    தொழிற்பெயர்.    நாடு.
நகரம்-ஆகுபெயர்கள்.                                      61