அயோத்தி நகரின் சிறப்பினைக் கூறும் படலம் என விரியும். அயோத்தி நகரின் அழகு. அதன் அமைப்பு. மதிலின் மாட்சி. அகழியின் பாங்கு. சோலையின் தன்மை. எழுநிலை மாடங்கள் மாளிகைகள் ஆகியவற்றின் தோற்றமும் பொலிவும் ஆகியவற்றை இப்படலப் பாடல்களால் அறியலாம். நாடு. நகரம். காடு. மேடு எதுவாயினும் அங்கு வாழ்வோரின் செயலையும் சீர்மையையும் பொறுத்தே சிறப்புடையதாக முடியும். அதனால் அயோத்தி நகரத்து மக்களைப் பற்றிக் கம்பர் வருணிக்கிறார். நகரத்தாரின் ஆடல் பாடல். மகளிர் மேனியழகு. மாந்தரின் மகிழ்ச்சி ஆகியனவற்றை அறிவதோடு. ஆங்கு வாழ்வோரின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் அறிகிறோம். செல்வச் செழிப்பின் எல்லையாக அயோத்தியில் கள்வர் இல்லை. இரப்பார் இல்லை என்று வருணிக்கிறார். எல்லோரும் கற்றுத் தெளிந்தோராதலின் எவர் கல்வி வல்லவர். எவர் அவ்வல்லமை இல்லார் என ஆய்தற்கு இடமில்லை. பொதுவாக. எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தியிருந்தனர் என்கிறார். கம்பர். கல்விப் பயனாய் அந்நகரத்தார் பரபோகக் கனியைக் கைப்பொருளாகப் பெற்றிருந்தமையைச் சுட்டி முடிகிறது.
|