பக்கம் எண் :

  நகரப் படலம்65

புகழப்பட்டது       (அயோத்தி  நகரம்); மேலும்; வரம்பு இல்   எவ்
உலகத்தோர்  யாவரும்
-   அளவற்ற   உலகங்கள்    எல்லாவற்றிலும்
வாழ்கின்றவர்கள் எல்லோரும்; தவம் செய்து ஏறுவான் -  தவங்களைச்
செய்து   அடைவதற்கு;   ஆதரிக்கின்ற   -   விரும்புகின்ற;    அவ்
உலகத்தோர்
  -  அந்தப்  பரமபதமாகிய  வீட்டு   உலகத்தவர்களும்;
இழிவதற்கு - பிறப்பதற்கு; அருத்தி புரிகின்றது - (தகுந்த நகரம்) இது
என்னும்    விருப்பத்திற்கு    உரியது;   அயோத்தி   மாநகரம்   -
அயோத்தியாகிய பெருமைக்குரிய நகரமேயாகும்.

இராம   கதையைப் பாடிய தமிழ்ப் புலவர்களும் வான்மீகி  முதலான
வடநூல்   முனிவர்களும்  புகழ்ந்தது  அயோத்தி  நகரையே.    எல்லா
உலகங்களிலும் வாழ்வோர் யாவரும் அருந்தவம் செய்து முடிவாக   வீடு
பேறு பெறவே விரும்புவர்; அவர்களும் அங்கே சென்றபிறகு   அதனை
விடவும்  பெருமை  மிக்கது. அயோத்தியே என்று உணர்ந்து.   அங்கே
அவதாரம் செய்ய விரும்புவர். அந்த அளவுக்குப் பெருமை    உடையது
அயோத்தி நகரம்- இது செய்யுளின் திரண்ட கருத்து.

‘கவிஞர்’  என்றது “இராமாயணம் பாடிய சங்கப் புலவர் முதலியோர்”
என்பது    ஐயரவர்கள்    குறிப்புரை.    (ஐயரவர்கள்     நூலகத்தின்
கம்பராமாயணப் பதிப்பு - பாலகாண்டம் - பக். 45). சங்க   காலத்து ஓர்
இராமாயணம்  வழங்கியதைத்  தொல்காப்பிய  உரை   முதலியவற்றால்
உணரமுடிகிறது.  அதனை பாடியவர்களை நினைந்து கம்பர்   கூறியதாக
ஐயரவர்கள்    குறிப்பிடுகிறார்கள்    வடநூல்    முனிவர்     என்றது
இராமாயணத்தை    வடமொழியில்   பாடிய   வான்மீகி.     வசிட்டர்.
போதாயனர் முதலியோரை                                 (10)

இதே     படலத்துள் மேலே இரு பாடல்களில் (97. 98) இக்கருத்தை
இராமபிரான்பால் சார்த்தி அயோத்தியின் சிறப்பைக்   கவிச்சக்கரவர்த்தி
விளக்குதல்   காண்க.  ‘புண்ணியம்  புரிந்தோர்    புகுவது  துறக்கம்....
எண்ணருங்  குணத்தின்  அவன்  (இராகவன்)...   இனிது இருந்து ஆள்
இடம்  என்றால்  ஒண்ணுமோ  இதனின்  வேறு   ஒரு போகம் உறைவு
இடம்  உண்டு  என  உரைத்தல்  (97).  “யாவர்க்கும்   புகலிடம் ஆன
செங்கண்  மால் பிறந்து அளப்பருங் காலம் திருவின்   வீற்றிருந்தனன்”
என்றார்;  “அங்கண்மா ஞாலத்து இந்நகர் ஒக்கும்  பொன் நகர் அமரர்
நாட்டு  யாதோ”  (98)  இவ்விரு  பாடல்களின்   தொடர்கள் இம்முதற்
பாடலுக்கு ஆழமான பொருள் காண உதவுவன.

நல்ல     கவிதைக்கு உரிய இயல்புகளை முற்றிலும்   கொண்ட கவி
நாயகராகிய   கம்பர்.   பல   இடங்களில்   நற்கவிதை   மற்றும்  மா
கவிதையின்  இயல்புகளைக்  கூறுவார்;  அவற்றுள்  இஃது   ஓர் இடம்.
கவிதைக்கு    இன்றியமையாதவை    இனிய    சொற்கள்;     அந்தச்
சொற்களிலே  அழகு  இருக்க  வேண்டும்; அழகு என்பது   பல்வகைச்
செம்மையால்   அமைவது.   அழகோடு  இனிமை  சேர    வேண்டும்.
செம்மையும்  இனிமையும் மட்டும் போதா; சொல்லப்படும்   பொருளும்
நல்லதாக    இருக்கவேண்டும்.   செம்மை.   இனிமை.     நற்பொருள்
இவற்றைக்  கொண்டுதரும்  சொற்கள்  சீரியனவாய்.    நுட்பம் சுட்டும்
கூர்மை  கொண்டனவாய்  இருத்தலும்  இன்றியமையாதது.   ‘செவ்விய.
மதுரம்  சேர்ந்த  நல்  பொருளின் சீரிய தீம் சொல்   வவ்விய கவிஞர்’
என்ற   தொடர்   கொண்டே   சிறந்த  இலக்கியத்    திறனாய்வையும்
இலக்கியக் கொள்கையையும் உருவாக்கலாம்.