பக்கம் எண் :

68பால காண்டம்  

புகழ்ந்தது    புரிகின்றது..... அயோத்தி என வினைமுற்று இரண்டாய்.
அயோத்தி  என்ற  பெயர் கொண்டு   முடிந்தது. யாவரும்: முற்றும்மை.
அவ்வுலகத்தோர் என்பதில் தொக்க    உம்மை உயர்வு சிறப்பும்மையாம்.
இழிவதற்கு:  இறங்குவதற்கு  இங்கே    மேனிலையிலிருந்து கீழ் இறங்கி
வருதல்  என்னும்  பொருளுடைய    ‘அவதாரம்’ என்ற வடசொல்லுக்கு
நேர்.                                                     1
 

94.நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!
   நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின்
   இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள்
   வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி
   உறையுளோ! யாது என உரைப்பாம்?

 

நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ- (அயோத்தி நகரமானது)
நிலமகளது   முகமோ!    முகத்திலணிந்த   திலகமோ!    அவளுடைய
கண்களோ!:   நிறை  நெடுமங்கல   நாணோ-   நிறைவான   நெடிய
திருமாங்கலியக்   கயிறோ?;  இலகு   பூண்  முலைமேல்  ஆரமோ-
மார்பகங்களின்   மேலணிந்து   திகழும்  மணிமாலையோ!;   உயிரின்
இருக்கையோ
-  அந்நில  மகளின்  உயிர்   இருக்கும்  இருப்பிடமோ?;
திருமகட்கு   இனிய  மலர்கொலோ
-  திருமகளுக்கு  வாழ்வதற்கினிய
தாமரை மலரோ!; மாயோன் மார்பில்  நன்மணிகள்  வைத்த பொற்
பெட்டியோ
- திருமாலின் மார்பிலணியும் நல்ல மணிகள்   வைக்கப்பட்ட
பொன்    பெட்டி   தானோ!;  வானோர்  உலகின்மேல்   உலகோ-
விண்ணுலகினும் மேலான வைகுந்தமோ; ஊழியின் இறுதி உறையுளோ-
யுகமுடிவில்   உயிர்களெல்லாம்  தங்கும்  திருமாலின்    திருவயிறோ?;
யாதென உரைப்பாம்
- வேறு எதுவென கூறுவோம்?

நிலமகளின்     முகம்.  திலகம்.  கண்.    மங்கல  நாண்.   ஆரம்
முதலியனவாக அயோத்தி நகரத்தைப் புனைந்துரைத்தார்.    பெண்களும்
மங்கல  நாண்  பெருமை  தருவதாதலால்  “நிறைநெடு  மங்கல நாண்”
என்றார்.    சிறந்த    உறுப்பான   முகத்தை   முதலில்     கூறினார்.
விண்ணுலகத்தினும்  சிறந்தது  பரமபதமாதலின்  “வானோர்    உலகின்
மேலுலகோ”   என்றார்   அருந்தி:   விருப்பம்.  ஒரே    பொருளைப்
பலவிதமாகக் கற்பித்த இப்பாடல் பலபடப் புனைவணி கொண்டது.    2
 
              ஞாயிறும் திங்களும் இமையாமல் திரிவதற்குக் காரணம் 
 

95.உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும். இருவர்க்கு
   ஒரு தனிக் கொழுநனும். மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும். உவமை
   கண்டிலா நகர்அது காண்பான்.