பக்கம் எண் :

70பால காண்டம்  

ஆகிய இரு நகரங்களையும்;  அயனார் பயிலுறவு உற்றபடி  - பிரமன்
(படைத்தது)  பயிற்சி  பெறும்படியாகும்;   பெரும்பான்மை இப்பெருந்
திருநகர்   படைப்பான்
-  மிகச்  சிறப்புடைய   இந்தப்  பெருநகரைப்
படைப்பதற்கு;  மயன்முதல்  தெய்வத்தச்சரும்- மயன் முதலான தேவ
உலகச் சிற்பிகளும்; தம்தம் மனத் தொழில் மறந்தார்- தமது நினைப்பு
மாத்திரத்தில் படைக்கும் தொழிலை    மறந்துவிட்டவர்களாக. நாணினர்-
(அயோத்தியை  ஒத்த  நகரைப் படைக்க   இயலாமைக்கு) வெட்கமுற்று
நிற்பர்;   புயல்தொடு   குடுமி நெடுநிலை   மாடத்து-  மேகங்களை
தொடுமளவு  நீண்ட மேல்   நிலைகளை கொண்ட மாடங்களை உடைய;
இந்நகர்  புகலும்  ஆறு  எவன்
-  இந்த  அயோத்தி  மாளிகைகளின்
சிறப்பைச் சொல்வது எவ்வாறு?

பிரமன்     அயோத்தியை    படைப்பதற்கு    முன்பு.  அமராவதி
அளகாபுரியாகிய  நகரங்களைப்  படைத்தது  முழுத்     தேர்ச்சி பெற்ற
பிறகே இந் நகரைப் படைக்க வேண்டுமெனக் கருதியதே   காரணமாகும்
என்றது தற்குறிப்பேற்ற அணியாகும்.

   ‘புயல் தொடு குடுமி’ என்றது உயர்வு நவிற்சி அணியாகும்

பயிலுறவு  உற்ற  படி:  பயிற்சி செய்தவாறு. குடுமி: சிகரம். மறந்தனர்
முற்றெச்சம்.                                               4
 
                                       போகத்திற்கு ஒரேஇடம்
 

97.‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’
   என்னும் ஈது அரு மறைப் பொருளே;
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி
   மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?
என் அருங் குணத்தின் அவன். இனிது இருந்து. இவ்
   ஏழ் உலகு ஆள் இடம் என்றால்.
ஒண்ணுமோ. இதனின் வேறு ஒரு போகம்
   உறைவு இடம் உண்டு என உரைத்தல்?

 

‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ என்னும்- (இம்மையில்)
புண்ணியம்  செய்தவர்கள்    (மறுமையில்)   சுவர்க்கம்  அடைவார்கள்
என்னும்;   ஈது  அருமறைப்  பொருளே-  இது.  வேதங்கள்  கூறும்
கருத்தாகும்;  இராகவன்  அன்றி-  இராம  பிரானை அல்லாது; வேறு
எவர்
-  வேறு  யார்; மண்ணிடை மாதவம் அறத்தொடு வளர்த்தார்-
இந்த  உலகத்திலே  சிறந்த    தவத்தை  அறத்துடனே வளர்த்தவர்கள்
இருக்கிறார்களா?;  எண் அருங் குணத்தின் அவன்- நினைப்பதற்கரிய
நற்குணங்களை  உடைய  அந்த இராமபிரான்; இருந்து இவ் ஏழ்உலகு
ஆள்  இடம்  என்றால்
-  இருந்து  இந்த ஏழுலகத்தினையும் ஆளும்
இடம் (அயோத்தி) என்றால்;  இதனின் வேறு ஒரு போகம் உறைவு