மறையும் தடவுதல் அறிவரு- வேதமும் தேடி அறிதற்கு அரிய; தனி முதல் அவனும் - ஒப்பற்ற முதல்வனாகிய ராம பிரானும்; புடைவரும் இளவலும் - அவனுக்குப பக்கம் வரும் இலக்குவனும்; உடன்வரு செயல் -சேர்ந்து வருகின்ற செயலானது; கடல்தரு முகில் - கடல் தந்த கரிய மேகமானது; ஒளிர் கமலம் அது அலரா - விளங்கும் தாமரை மலர்கள் அலர; வடவரையுடன் வரு செயல் என- மேரு மலையுடன் வருவது போன்றது என; நிகர் புகல்வார் - (இந்த இருவரையும் பார்த்தவர்கள்) ஒப்பிட்டுக் கூறுவார்கள். கடல் தரு முகில்: கடல் தந்த கார்மேகம். அலரா: மலர்ந்து. வடவரை: வடக்கிலுள்ள மலை (மேருமலை) தடவுதல்: தேடுதல். தனிமுதல்: ஆதிபகவன் அவன்: உலகறி சுட்டாக நின்று பரமனை உணர்த்தும். புடை:பக்கம். ‘கமலம் பூத்த கரு முகில்’ இராமனுக்கு உவமை. ‘வடவரை’ இலக்குவனுக்கு உவமை. ‘புகல்வார்’ என்ற பயனிலைக்கேற்ப ‘கண்டோர்’ எழுவாயாகக் கொள்ளப்பட்டது. 131 |