பக்கம் எண் :

  அகலிகைப் படலம்285

முலை  -   இன்பத்தைத்    தருகின்ற    ஆபரணங்களை   அணிந்த
தனங்களையும்; நாகு இள வஞ்சி ஆம் மருங்குல் - மிக இளமையான
வஞ்சிக்கொடி  போன்ற  இடையையும்; புதுமலர் புலம்பும் மேகலை -
அப்பெழுது    பூத்த   புது   மலரே  (ஒலிக்கும்)  மேகலை  என்னும்
அணிகலனாகவும்; புனை  அறல்  கூந்தல்  - அழகிய கருமணலாகிய
கூந்தலையும்;  சிலம்பு  சூழும்  கால்  -  மலையைச்சுற்றி  செல்லும்
வாய்க்கால்களாகிய   சிலம்பென்னும்   அணியைச் சுற்றிலும் பூண்டுள்ள
பாதங்களையும்  உடைய;  சோணை ஆம்  தெரிவையை - சோணை
என்னும்   நதியாகிய   பெண்ணை;  சேர்ந்தார்  -  (விசுவாமித்திரன்.
இராமன். இலக்குவன் ஆகிய) மூவரும் போய் அடைந்தார்கள்.  

இது     உருவக அணி. இங்கு நதி பெண்ணாக   உருவகப்படுத்தப்
பெறுகிறது;   அதனால்   பெண்ணின்  தன்மை   நதியிடத்து   ஏற்றிக்
கூறப்பட்டுள்ளது.  மணற்குன்று  -  முத்து  முதலிய  இரத்தினங்களும்.
சந்தனக்   கட்டையும்  அகிற்கட்டையும்   மலையிலிருந்து   ஓடிவரும்
ஆற்றினால்  கொண்டு  வரப்பட்டு  மணற்   குன்றைச்  சேர்ந்துள்ளன.
சிலேடை:   நதி   -   மாமணி   ஆரத்தோடு  அகில்  பொருந்துதல்;
மணற்குன்றுகள்;   வஞ்சிக்கொடி;  மலர்கள்;   கருமணல்   மலையைச்
சுற்றிச்  செல்லும்  வாய்க்கால்கள். பெண்: மாமணி ஆரத்தோடு  அகில்
பொருந்திய  அணிகளோடு  கூடிய   தனங்கள்;  இடை (வஞ்சிக்கொடி);
மேகலை  என்னும்  இடையணி   (மலர்வரிசை);   கூந்தல் (கருமணல்);
சிலம்பு   என்னும்   அணியை   அணிந்துள்ள   பாதங்கள்.  அறலும்
கூந்தலும்.  நெளிவாலும்  கருமையாலும் அழகாலும்  கூந்தலுக்கு அறல்
உவமையாயிற்று. சிலம்பு: மலை; காற்சிலம்பு. கால்:  வாய்க்கால்;  பாதம்.
சோணை:  மகத நாட்டின் வழியே ஓடுவதும் கங்கையில்  கலப்பதுமான
ஓர் உபநதி.                                               1
 
  

453.நதிக்கு வந்து அவர் எய்தலும்.
   அருணன்தன் நயனக்
கதிக்கு முந்துறு கலின மான்
   தேரொடும். கதிரோன்.
உதிக்கும் காலையில் தண்மை
   செய்வான். தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்
   போல். கடல் குளித்தான்.

 
  

அவர்   -   அம்   மூவரும்;   நதிக்கு   வந்து  எய்தலும்  -
சோணையாற்றுக்கு  வந்து  சேர்ந்த  சமயத்தில்;  கதிரோன் உதிக்கும்
காலையில்  
-  ஆயிரம்  கதிர்களையுடைய   சூரியன்  மறுநாள் தான்
கிழக்குத்   திசையில்  உதிக்கும்  பொழுது;  தண்மை  செய்வான்  -
(அம்மூவர்க்கும்)    குளிர்ச்சி   தரும்   பொருட்டு;  தனது  உருவில்
கொதிக்கும்   வெம்மையை  
-   தனது   வடிவத்திலே   இயல்பாக
எப்பொழுதும்   கொதிக்கின்ற  வெப்பத்தை;   ஆற்றுவான்போல்  -
இப்பொழுது தணித்துக்