கொள்பவனைப்போல; அருணன் தன் நயனம் - (தன் சாரதியாகிய) அருணனுடைய கண்கள்; கதிக்கும் - விரைந்து செல்வதைக் காட்டிலும்; முந்துறு கலினம் மான் - முந்திச் செல்லுகின்ற கடிவாளத்தைக் கொண்ட குதிரைகள் பூட்டிய; தேரொடும் - தனது தேருடன்; கடல் குளித்தான் - மேற்குக் கடலில் மூழ்கினான். தற்குறிப்பேற்ற அணி: மேற்கில் கதிரவன் மறைதலை. அவன் தன் வெம்மையைத் தணிக்கும்பொருட்டு மேற்குக் கடலில் மூழ்கியதாக வருணித்தார். கதிரவன் முதலான கிரகங்கள். நட்சத்திரங்கள் மேற்கே மறைந்து கிழக்கே உதிக்கும். அதனை மேற்குக் கடலில் மூழ்கி மறைந்து கிழக்குக் கடலில் மீண்டும் எழுவதாகக் கூறுதல் கவிமரபு. தேர்ப்பாகனும் குதிரையும்: தேர்ச் சாரதியின் கண் பார்வை எவ்வளவு தூரம் செல்லுமோ அதைவிட அதிக தூரம் அவனது குதிரைகள் செல்லும். அருணன்: கதிரவனின் தேர்ப்பாகன். 2 |