காலன் மேனியின்- யமனது நிறம்போலக்; கருகு இருள் கடிந்து- கறுத்துள்ள இருட்டை நீக்கி; உலகு அளிப்பான் - உலகத்தைக் காக்கும் பொருட்டு; நிறை கதிர்க் கடவுள் - நிறைந்த கதிர்களையுடைய கதிரவன்; தேரொடு - தனது இரதத்தோடு; நீலம் ஆர்கலி - நீலக்கடலிலே; மாலின் மாமணி அயனொடு வந்த - திருமாலின் கரிய அழகிய உந்தியிலே பிரமனோடு தோன்றிய; மூலத் தாமரை முழுமலர் முளைத்தென - முதன்மையான பெரிய தாமரை மலர் முளைத்தது போல; முளைத்தான் - உதித்தான். தற்குறிப்பேற்ற அணி. கடலுக்குத் திருமால்; அக் கடலில் கதிரவன் தோன்றுகிற உதயமலைக்குத் திருமாலின் உந்தி; கதிரவனுக்கும் பிரமன்; தேருக்குத் தாமரை மலர் ஆகியவை உவமைகள் ஆயின. 4 |