பக்கம் எண் :

  அகலிகைப் படலம்291

ஓவு இல் குங்குமச் சுவடு உற.
   ஒன்றொடு ஒன்று ஊடி.
பூ உறங்கினும். புள் உறங்
   காதன - பொய்கை.

 

பொய்கை  -  (அம் மிதிலை நாட்டிலுள்ள) நீர் நிலைகளில்;  தூவி
அன்னம்  நடை கண்டு
- சிறகுகளையுடைய அன்னங்கள்   (மகளிரின்)
நடையழகைப் பார்த்து; தம் இனம் என்று தொடரும்  - தன் இனமான
அன்னப்  பறவை  என்று  மயங்கி  (அவர்)  பின் தொடர்ந்தன; கூவும்
மென்குயில்  குதலையர்  
- (இனிமையாகக்)  கூவுகின்ற மென்மையான
குயிலின்  குரல்போன்ற மழலைச்  சொற்களையுடைய மகளிர்; குடைந்த
- மூழ்கி விளையாடின; தண்புனல் வாய் - குளிர்ந்த நீரில்; ஓவு இல் -
விட்டு  நீங்காத; குங்குமம் சுவடு உற -  குங்குமக் குழம்பின் சுவடுகள்
(தம்மேல்)  பொருந்தியதால்;  ஒன்றோடு  ஒன்று  ஊடி  - ஒன்றுடன்
ஒன்று  பிணங்கி;  பூ உறங்கினும் -  (தண்ணீரிலுள்ள தாமரை முதலிய)
மலர்கள்   உறங்கினாலும்;   புள்   உறங்காதன   -  (அவற்றிலுள்ள)
பறவைகள் தூங்காமல் கிடக்கின்றன.  

மயக்க  அணி: குளங்களில் பெண்கள் இறங்கி விளையாகின்றார்கள்.
அப்பொழுது.   அவர்கள்  உடம்பில்  அணிந்துள்ள குங்குமக் கலவை
அக்குளங்கிலுள்ள   பறவைகளின்  உடல்மேல் படிகிறது. அந்நிலையில்
பிற   பறவைகள்   ஒன்றை    ஒன்று   நோக்கும்போது  தம்  இனப்
பறவைகளையே    பிற   இனப்பறவைகளென    மயங்கித்   தம்முள்
மாறுபடுகின்றன.   கலவிக்   குறி:  நிறம்   வேறுபடுதலும்  நன்மணம்
உறுதலும்.  பூவிக்குத்  தூக்கம்:  இதழ்குவிதல்.   பறவைக்குத்  தூக்கம்:
கலவயைின்றி இளைப்புத் தீரத் தூங்குதல்.                       9
   

461.முறையினின் முது மேதியின்
   முலை வழி பாலும்.
துறையின் நின்று உயர்மாங்கனி
   தூங்கிய சாறும்.
அறையும் மென் கரும்பு ஆட்டிய
   அமுதமும். அழி தேம்
நறையும் அல்லது. நளிர் புனல்
   பெருகலா - நதிகள்.
 
  

நதிகள்  -  (மிதிலை நாட்டு) ஆறுகளில்; முறையினில் - ஒன்றைத்
தொடர்ந்து ஒன்றாக;  முது  மேதியின்  முலைவழி  பாலும் - முதிய
எருமைகளின்   மடிகளில்  இருந்து  பெருகின்ற  பாலும்;  துறையிலே
நின்று  
-  கரைகளிலே   நிறைபெற்று;  உயர்  மாங்கனி  -  ஓங்கி
வளர்ந்துள்ள  மாமரங்களின்  பழங்களிலிருந்து;   தூங்கிய  சாறும் -
வழியும் சாறும்;  அறையும்  மென்  கரும்பு  - வெட்டப்பட்ட இனிய