பக்கம் எண் :

  அகலிகைப் படலம்297

நவ்விபோல் விழியினாள் தன்
   வன முலை நணுகலுற்றான்;
 

அவ் உரை இராமன் கூற- இவ்வாறு இராமன் கேட்க;  அறிவனும்
- முனிவனும் (அந்த  வார்த்தைகளைக்  கேட்டு);  அவனை நோக்கி -
இராமனைப்  பார்த்து  (கூறத் தொடங்கினான்); செவ்வியோய் - எல்லா
நற்குணங்களும்    உடையவனே!;   கேட்டி   -   (நான்  கூறுவதைக்)
கேட்பாயாக;  மேல்நாள்   -  முன்னொரு  காலத்திலே;  செறிசுடர்க்
குலிசத்து  
-  மிகுந்த  ஒளியுள்ள வச்சிரப்படை ஏந்திய; அண்ணல் -
பெருமை  மிக்க இந்திரன்; அவ்வியம் அவித்த - பொறாமை முதலான
தீய   குணங்களை  நீக்கிய;  சிந்தை  முனிவனை  -  மனம் படைத்த
கௌதம  முனிவர்;  அற்றம்  நோக்கி  -  (ஆச்சிரமத்தில்)  இல்லாத
சமயம்  பார்த்து  (அங்கே  சென்று); நவ்வி போல் விழியினாள்தன் -
மான்  விழியாளான  அகலிகையின்;  வனமுலை  நணுகல் உற்றான் -
அழகிய தனங்களைச் சேர விரும்பினான்.  

அகலிகை:  படைப்புக்கடவுளான பிரமன் முன்பு படைத்த மக்களின்
உடம்பிலுள்ள  உறுப்பு அழகைச் சிறிது சிறிதாக எடுத்து அழகான ஒரு
பெண்ணைப்    படைத்தான்.    அவளுக்கு   அ?ஹல்யா   என்னும்
பெயரிட்டான்.  ?ஹலம்.  ?ஹல்யம்   -  அழகின்மை.  அ?ஹல்யா -
அழகின்மை  இல்லாதவள்.  அகலிகை   வரலாறு இந்திரன் இத்தகைய
அழகிய பெண்ணுக்குத் தக்க  கணவர்தானே  என்று செருக்குக்கொண்டு
அவளைத்  தன்  தாரமாகக்  கருதினான்.   ஆனால் பிரமன் அவனது
எண்ணத்தோடு    மாறுபாடு   கொண்டான்.   அதனால்   அவளைக்
கௌதமனிடம்  தந்து.  ‘இவளை  நீதான்   பாதுகாக்கவேண்டும்’ எனக்
கூறி   ஒப்படைத்தான்.  முனிவனும்   அவளைப்  பலகாலம்  காத்துப்
பிரமனிடம்     சேர்த்தான்.        பிரமனோ       அம்முனிவனின்
சபலமின்மையையும்.   உயர்ந்த    தவத்தையும்    அறிந்து  அவளை
அம்முனிவனுக்கே மணம் புரிவித்தான். அதனால்  பொறாமை கொண்ட
இந்திரன்  வேற்று  வடிவத்திலே அவளைச்  சேரமுற்பட்டான் என்பது
வரலாறு.                                                 17
   

469.‘தையலான் நயன வேலும்.
   மன்மதன் சரமும். பாய.
உய்யலாம் உறுதி நாடி
   உழல்பவன். ஒரு நாள் உற்ற
மையலாம் அறிவு நீங்கி.
   மா முனிக்கு அற்றம் செய்து.
பொய் இலா உள்ளத்தான்தன்
   உருவமே கொண்டு புக்கான்.

 
  

தையலான்   நயன  வேலும்  -   அகலிகையின்   கண்களாகிய
வேல்களும்;   மன்மதன்   சரமும்  பாய  -  மன்மதனுடைய  மலர்
அம்புகளும்  தன்மேல்  பாய்வதனால்; உய்யல் ஆம் -  (மிக வருந்தி)
(அவளைச் சேர்ந்து அக்காம நோயிலிருந்து நீங்கிப்)  பிழைக்கக் கூடிய;
உறுதி நாடி