பக்கம் எண் :

298பால காண்டம்  

-ஓர்   உபாயத்தைத்தேடி;  உழல்பவன்  -   அலைபவனான    அந்த
இந்திரன்;  ஒருநாள் உற்ற மையலால் - ஒரு தினத்தில் அளவற்ற காம
மயக்கத்தால்;  அறிவு  நீங்கி   -   நல்லறிவுகெட்டு;  மாமுனிக்கு  -
பெருமையுள்ள    அக்கௌதம   முனிவனுக்கு;   அற்றம்  செய்து  -
பிரியுமாறு உண்டாக்கி; பொய்யிலா உள்ளத்தான்தன் - பொய்யில்லாத
மனத்தையுடைய  அம்முனிவனது; உருவமே கொண்டு - உருவத்தையே
தான்  எடுத்துக்   கொண்டு;  புக்கான்  - அவனது ஆச்சிரமத்துள்ளே
புகுந்தான்.  

இந்திரன்   நிலை: அகலிகையின் கண்களாகிய வேலும். மன்மதனின்
காம  பாணங்களும்  ஒரே  சமயத்தில் தாக்க. அக் காம   மயக்கத்தால்
அறிவை   இழந்தான்   இந்திரன்.   காமத்தால்   வருந்திய   அவன்
அதிலிருந்து  பிழைக்க.  ஒரே  வழி ‘கௌதம முனிவன்  உருவத்திலே
சென்று  அகலிகையைச்  சேர்வதே’  என  உறுதி கொண்டான். அதன்
பொருட்டு அம்முனிவனை அப்பால் போகுமாறு  தந்திரம்  செய்கிறான்.
அம்  முனிவனது வடிவிலே ஆச்சிரமத்திற்குள்  நுழைகிறான்.  முனிக்கு
அற்றம்  செய்தல்:  பொழுது  புலர்வதன்  முன்னே  கோழி  கூவுமாறு
இந்திரன்  செய்தான்.  கௌதம  முனிவனும் காலைக்  கடன்  கழித்தற்
பொருட்டு வெளிப்புறம் சென்றான்.                            18
   

470.‘புக்கு அவளோடும். காமப்
   புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்லோடும்.
   உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்.
‘தக்கது அன்று’ என்ன ஓராள்;
   தாழ்ந்தனள் இருப்ப. தாழா
முக்கணான் அனைய ஆற்றல்
   முனிவனும். முடுகி வந்தான்.

 
  

புக்கு  -  (இவ்வாறு  இந்திரன்  முனிவனது  உருவம்    (கொண்டு)
சென்று; அவளோடும் காமம் - அந்த அகலிகையோடு புதுக்  கலப்பில்
அமைந்த  காமமாகிய;  புதுமணம்  மதுவில்  தேறல்  -  மணமுள்ள
மதுவின்  தெளிவை;  ஒக்க  உண்டு  இருத்தலோடும்  -  (இருவரும்)
சமமாக   அனுபவித்து   கொண்டிருக்கும்போது;   உணர்ந்தனள்   -
(தன்னோடு   மகிழ்பவன்  இந்திரனே  என்ற)   தவற்றை   அறிந்தாள்;
உணர்ந்த  பின்னும்  
-  (அவ்வாறு)  அறிந்த பின்பும்; தக்கது அன்று
என்ன  
-  (இத்தீய  செயல் தனக்குத்) தகுதியானதாக  இல்லை  என்று;
ஓராள்  
-  சிந்தனை  செயலுக்குத்   தானும்  மனம் பொருந்தியவளாக
இருக்க  (அச்  சமயத்தில்);  தாழா   முக்கணான்  அனைய  - (எந்த
வகையிலும்)  குறைவு  இல்லாத  முக்கண்ணனாகிய  சிவனை  ஒத்துள்ள;
ஆற்றல்  முனிவனும்  
-  வல்லமை  நிரம்பிய அம்முனிவனும்; முடுகி
வந்தான்
- (தாழாமல்) விரைவாக மீண்டு தன் ஆச்சிரமம் வந்தான்.  

அகலிகையும்    இந்திரனும்: கௌதமன் உருவில் வந்த இந்திரனைத்
தன் கணவன் என்றே நினைந்து அவனோடு கூடி மகிழ்ச்சியாக இருக்