பக்கம் எண் :

306பால காண்டம்  

10. மிதிலைக் காட்சிப் படலம்
 
   

சனக     மன்னனின்  நாடு விதேக  நாடு. அதன்  தலைநகரான
மிதிலையின்  தோற்றத்தை  இராம  இலக்குவரும்.  விசுவாமித்திரனும்
கண்ட வரலாறு கூறுவது இப்படலம்.
   

விசுவாமித்திரன்     முதலான  மூவரும்  மிதிலை  நகருள்  பல
காட்சிகளைக்  காண்கிறார்கள்.  கன்னி  மாடத்தில்  நின்ற  சீதையும்
இராமனும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்கின்றனர். இராமனது
நினைவால்   சீதை  உற்ற  துன்பநிலை  -  அம்  மூவரும்  சனகன்
எதிர்கொள்ளச்   சென்று  மாளிகையில்  தங்குதல்  -  இராமனுக்குச்
சதனாந்தர்  விசுவாமித்ரின்  வரலாறு  கூறுதல்  - கௌசிக முனிவன்
தவம்  செய்தல்  -  தேவர்கள்  கௌசிகனைப் பிரம ரிசியாக்குதல் -
சீதையின் உரு வெளிப்பாடு கண்டு இராமன் கலங்குதல் - பின் அந்த
இராமன்  முனிவரோடும் தம்பியோடும் சனகனது வேள்விச் சாலையை
அடைதல்   -   சனகன்  விசுவாமித்திரனை  வினவல்  -  அவரும்
விடையளித்தல் ஆகியன அடங்கியுள்ளன.

                              மிதிலைக் கொடிகளின் தோற்றம்
   

480.

‘மை அறு மலரின் நீங்கி.
   யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்’ என்று.
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!
  

அந்த கடிநகர் -காவல் மிக்க அந்த மிதிலா நகரம்; செய்யவள்
 - திருமகள்;   மை  அறு  மலரின்  நீங்கி  - குற்றமற்ற தாமரை
மலரை  விட்டுப்  பிரிந்து; யான் செய் மாதவத்தின் - நான் புரிந்த
மிகப்   பெரிய   தவத்தால்;  வந்து இருந்தாள் - என்னிடம் வந்து
பிறந்துள்ளாள்; என்று செழுமணிக் கொடிகள் என்னும்  -  என்று
கூறிப் பெரிய அழகிய  கொடிகள்  என்கின்ற;  கைகளை  நீட்டி  -
(தன்) கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டி (அவற்றால்); கமலம்