482. | பகல் கதிர் மறைய. வானம் பாற்கடல் கடுப்ப. நீண்ட துகில் கொடி. மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற. முகில் - குலம் தடவும்தோறும் நனைவன. முகிலின் சூழ்ந்த அகில்புகை கதுவும்தோறும் புலர்வன. ஆடக் கண்டார். |
பகல் கதிர் மறைய- பகற்பொழுதிற்குக் காரணமான கதிரவனின் ஒளிக்கதிர்கள் மறையவும்; வானம் பாற்கடல் கடுப்ப - வானம் திருப்பாற்கடலைப் போன்று காட்சியளிக்கவும்; மிதிலை மாடத்து உம்பரில் - மிதிலை நகரின் உப்பரிகை வீடுகளின் மேல்; துவன்றி நின்ற - நெருங்கிய; நீண்ட துகில் கொடி - நீளமான கொடிச் ்சீலைகள்; முகில் குலம் - மேகக் கூட்டம்; தடவும் தோறும் - (தம்மை வந்து) வருடும் பொழுதும்; நனைவன - அதன் நீரினால் நனைவனவாகவும்; முகிலின் சூழ்ந்த - (அம்) மேகம்போலச் சூழ்ந்து கொண்ட; அகில்புகை கதுவும் தோறும் - அகிற் கட்டையின் புகை (தம்மில் வந்து) படியும் பொழுதும்; புலர்வன - உலர் வனவாகவும்; ஆடக் கண்டார் - ஆடுதலைப் பார்த்தார்கள். |
கொடிகளின் நெருக்கம். மிகுதி. மேகக் கூட்டத்தை அளாவும் உயர்ச்சி. அகிற்புகையின் மிகுதி ஆகியன இதில் உணர்த்தப் பெறுகின்றன. அணி: தொல்லுப்பெறலணி-துகிற்கொடி மேகங்களால் நனைவதும். அகிற் புகையால் உலர்ந்து பழைய நிலையை அடைவதும் இவ்வணியாகும். பாற்கடலும் துகிலும்: ‘பாற்கடல் போன்ற துகில்’ என்றதால் துகில் வெண்ணிறமுடையது என்பது தெரிகிறது. 3
மூவரும் நகரினுள் புகுதல் |
483. | ஆதரித்து. அமுதில் கோல் தோய்த்து. ‘அவயமம் அமைக்கும் தன்மை யாது?’ எனத் திகைக்கும் அல்லால். மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதையைத் தருதலாலே. திருமகள் இருந்த செய்ய போது எனப் பொலிந்து தோன்றும். பொன் மதில். மிதிலை புக்கார். |
ஆதரித்து- (மன்மதன் சீதையின் மேனியைப் போன்ற ஓர் அழகிய வடிவத்தை) எழுத விரும்பி; அமுதில் கோல் தோய்த்து - |