பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்309

அமுதத்தில்     எழுதுகோலைத்  தோய்த்துக்  கொண்டு; அவயவம்
அமைக்கும்
- அவள்  உறுப்புகளைச்  சித்திர்க்கும்;  தன்மை யாது
என 
- விதம் (அறியாமல்  அவ்வகை) எதுவோ  என்று; திகைக்கும்
அல்லால்
- திகைத்து  நிற்பானேயல்லாமல்;  மதனற்கும்  -  அந்த
மன்மதனுக்கும்;  எழுத   ஒண்ணா -  எழுத  முடியாத; சீதையைத்
தருதலாலே
- பேரழகு  மிக்க   சீதையைப்   பெற்றதால்; திருமகள்
இருந்த
- இலக்குமி  வாழும்;  செய்ய  போது என - செந்தாமரை
மலர் போல; பொலிந்து தோன்றும்  -  விளக்கமுற்றுத்  தோன்றும்;
பொன் மதில் மிதிலை
- பொன்மதில் சூழ்ந்த மிதிலை நகரினுள்ளே;
புக்கார்
- (மூவரும்) சென்றார்கள்.
 

சீதையின்  அழகு: மன்மதன் உலகத்தவர் அனைவரது அழகையும்
வரையறுத்து   உணர்ந்தவன்;   ஆண்   பெண்களாகிய   மக்களின்
மனத்திலே  தோன்றியுள்ளவன்: தனக்கு வடிவம் இல்லாமல் இருந்தும்
ஐந்து அம்புகளைக் கொண்டு மூவுலகையும் தன்வயப்படுத்தும் திறமை
பெற்றுள்ளான்.    இத்தகைய    இயல்புடைய    அம்    மன்மதன்
எல்லையில்லாத  பேரழகு  உடைய  சீதையின்  உருவத்தைத் தானே
சித்திரத்தில்  அமைக்கக்  கருதினான்;  அதற்கு  வண்ணப்  பொருள்
அமுதமேயெனத்  தீர்மானித்து.  அந்த அமுதத்திலே எழுதுகோலைத்
தோய்த்து   எடுத்து   எழுதத் தொடங்கினாலும்  அவளது  அழகை
முழுமையாக  எழுத முடியாமல் திகைப்பானேயல்லாமல் அச் சீதையின்
உறுப்புகளுள் ஒன்றைக் கூடச் சரியாக எழுத முடியாதாம்.         4

                                         தெருக்களின் சிறப்பு
 

484.

சொற்கலை முனிவன் உண்ட
   சுடர் மணிக் கடலும். துன்னி
அல் கலந்து இலங்கு பல் மீன்
   அரும்பிய வானும் போல.
வில் கலை நுதலினாரும்.
   மைந் தரும். வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட
   நெடுந் தெருஅதனில் போனார்.
 

சொற்கலை    முனிவன் - தமிழிலே  இலக்கண நூலைச் செய்த
அகத்திய முனிவனால்; உண்ட - பருகப்பட்டு; சுடர்மணிக்  கடலும்
- (நீர்  வற்றிய)  ஒளி  பொருந்திய இ ரத்தினங்கள் கிடக்கும் கடலும்;
அல் கலந்து  
-  இரவுக்  காலத்தில் பொருந்தி; துன்னி இலங்கு -
நெருங்கி விளங்கும்;  பல்மீன்  அரும்பிய  -  நட்சத்திரங்கள்  பல
தோன்றிய;  வானும்  போல  -  ஆகாயமும்  போல;  வில்கலை
நுதலினாரும்
- ஒளியுள்ள பிறை போன்ற  நெற்றியுடைய  மகளிரும்;
மைந்தரும்
- ஆடவரும்;  வெறுத்து   நீத்த   -   வெறுப்புற்றுக்
கழற்றியெறிந்த; பொன்கலன்   கிடந்த   -    பொன்   அணிகள்
தெருவெங்கும் விழுந்துகிடக்கின்ற;  மாட  நெடுந்தெருவதனில்  -
மாடங்களையுடைய  நீண்ட  வீதியிலே;  போனார் - (அம் மூவரும்)
சென்றார்கள்.