சுடர்மணிக் கடலும் பொற்கலனும்; மைந்தரும் மகளிரும் ஊடற்காலத்தே வெறுத்து எறிந்த அணிகலன்கள் தெருவெங்கும் பரவிக் கிடக்கின்றன; அந்த வீதி. அகத்திய முனிவன் குடித்ததால் தண்ணீர் இல்லாமல் இரத்தினங்கள் விளங்கும் கடல்போலவும். நட்சத்திரங்கள் விளங்கும் வானத்தைப் போலவும் தோன்றுகிறது. அணி: வீறுகோளணி - இங்குச் செல்வத்தின் மிகுதி சொல்லப் பெற்றமை அறியத்தக்கது. சொற்கலை முனிவன்: அகத்தியன்; தமிழ்மொழி இலக்கணத்தைச் சிவனிடம் நன்கு கற்றுப் பேரகத்தியம். சிற்றகத்தியம் என்னும் இலக்கண நூல்களை இயற்றித் தமிழைச் செழிக்கச் செய்தார். ஆதலின் அவர் இவ்வாறு போற்றப் பெற்றார். இலக்கண நூலை வடமொழியாளர் ‘சப்த சாஸ்திரம்’ என்பர் (சப்தம்-சொல்: சாஸ்திரம்-கலை). |
485. | தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப. ஆறும் ஆய். கலின மா விலாழியால் அழிந்து. ஓர் ஆறு ஆய். சேறும் ஆய். தேர்கள் ஓடத் துகளும் ஆய். ஒன்றோடு ஒன்று மாறு மாறு ஆகி. வாளா கிடக்கிலா மறுகில். சென்றார். |
தாறு மாய் - (களிப்பு மிகுதியால்) அங்குசத்தை முறிக்கின்ற; தறுகண் குன்றம் - அஞ்சாமையுள்ள மலைபோன்ற யானைகள்; தடமத அருவி - மிக்க மத நீர்ப் பெருக்கை; தாழ்ப்ப - சொரிய விடுவதால்; ஆறும் ஆய் - (கரிய) ஒரு நதி தோன்றி; கலினம் மா விலாழியால் - கடிவாளம் பூண்ட குதிரைகளின் வெண்மையான வாய் நுரையால்; அழிந்து - அக் கரிய நிறம் மாறி; ஓர் ஆறு ஆய் - வேறொரு வெண்ணிற நதியாகி; தேர்கள் ஓட - இரதங்கள் இடைவிடாமல் ஓடித் திரிவதால்; சேறும் ஆய் - (நீர் சிறிது உலர்ந்து) சேறாகியும்; துகளும் ஆய் - (மீண்டும் தேர்கள் ஓடுவதனால்) புழுதியாகவும்; துகளும் ஆய் -(மீண்டும் தேர்கள் ஓடுவதனால்) புழுதியாகவும் ஆகி; ஒன்றோடு ஒன்று - (இவ்வாறு அடிக்கடி) ஒன்றோடு ஒன்று; மாறு மாறாகி - பெரிதும் மாறுபடும் தன்மையுடையதாய்; வாளா கிடக்கிலா - (சிறிது பொழுதும்) ஒரே தன்டையுடையதாக இல்லாத; மறுகில் சென்றார் - பெருவீதியிலே (மூவரும்) போனார்கள். |
கரிய ஆறும் வெள்ளாறும்: யானையின் மதநீரால் ஒரு கரிய ஆறு தோன்றியது; பின்னாக் குதிரையின் வாய்நுரை அதில் கலந்தமையால் அக்கருநிறம் சிறிது மாறி வெண்ணிற நதியாயிற்று. மறுகு - தெரு: தேர்கள் இடை உலர்ந்த அந்த இடம் புழுதியாக மாறிற்று. இவ்வாறு மீண்டும் யானை முதலியன செல்லுவதால் மாறி மாறிக் கருநிற நதியும்; வெண்ணிற நதியும் உண்டாகும் வீதி எனலாம். 6 |