தண்டுதல் இன்றி- நீங்காமல்; தலைத் தலை ஒன்றி - (கணவன மனைவி என்கிற) இரண்டு இடங்களிலும் ஒரு தன்மைய தாய்; சிறந்த காதல் - மிகுதியான ஆசையின் பயனான காம இன்பத்தை; உண்டபின் - (ஆடவரும் மகளிரும்) ஒருசேர அனுபவித்த பின்பு; கலவிப் போரின் - அந்தப் புணர்ச்சியாகிய போரிலே; ஒசிந்த - சோர்ந்து கிடந்த; மென் மகளிரே போல் - மென்மையான பெண்களைப் போல; பண்தரு கிளவியார்தம் - இசைப் பண்ணைப் போன்ற சொற்களைப் பேசும் பெண்களின்; புலவியில்- ஊடல்களிலே; பரிந்த கோதை - (அவர்களால்) கழற்றி வீசப்பட்ட மாலைகள்; வண்டொடு கிடந்து - (தம்மேல் மொய்த்த) வண்டுகளுடன் கீழே விழுந்து கிடந்து; தேன் சோர் - தேன் வழிவதற்கு இடமான; மணி நெடுந்தெருவில் - அழகிய பெருவீதிகளில்; சென்றார் - போனார்கள். மாதரும் பூமாலைகளும்: புணர்ச்சிக்குப்பின் மெலிந்து உறங்குகிற பெண்களைப்போல் அம்மகளிரால் ஊடலால் வீசியெறியப்பட்ட பூமாலைகள் வாடிக் கிடக்கின்றன. மிதிலைத்தெரு: மிதிலையின் தெருக்கள் பலவகைப் பட்டன என்பதைத் தெரிவிக்க மூன்று பாடல்கள் அமைந்துள்ளன. 7
வீதிகளில் கண்ட காட்சிகள் |