பக்கம் எண் :

312பால காண்டம்  

ளால்   அமைந்த; பாடல் - வாய்ப்பாட்டு இசையும்; தைவரும் மகர
வீணை  
-  (கைவிரலால்)  தடவி  வாசிக்கப்படுகிற  மகர வீணையின்
இசையும்;  தண்ணுமை  - மத்தளத்தின் ஓசையும்; தழுவித் தூங்க -
மாறுபடாமல்   ஒன்றோடு     ஒன்று  ஒத்து  ஒலிக்கவும்;  கைவழி
நயனம்    செல்ல  
-  (பலவகையாகக்   குறிப்புக்     காட்டுகின்ற
தம்முடைய) கைகள் செல்லும்  வழியே   தம்  கண்களின்   குறிப்புப்
பார்வை  செல்லவும்; கண் வழி மனமும்  செல்ல - அக்கண்களின்
பார்வை  செல்லும்  வழியிலே  மனத்தின்   குறிப்புச்    செல்லவும்;
ஐயம் நுண்  இடையார்
-  உள்ளதா  இல்லையா  என்று கண்டவர்
சந்தேகப்படும்படியான சின்ன இடையை உடைய  மகளிர்;  ஆடும் -
நாட்டியம்   ஆடுகின்ற;  ஆடக  அரங்கு -  பொன்மயமான நடன
சாலைகளை; கண்டார் - பார்த்தார்கள்.  

நடனத்தில்   செய்யும் முறை நான்கு: கண்கள். கை. மனம். உடல்
என  நான்கன் தொழில்களாலும் நடனமுறை நிகழும். கைவழி நயனம்
செல்ல:   கையில்  தொழில்.  கண்வழி  மனமும்  செல்ல:  கருத்தில்
தொழில்.  மழலையின்  இயன்ற  பாடல்:  மிடற்றின் தொழில். ஆடும்:
உடலின்  தொழில்  யாழின்  நரம்புக்கு உவமை: தேன் ஒழுக்கு. நெய்:
இங்கே  ‘தேன்’  என்னும்  பொருள்  தருகிறது. யாழ்வகை நான்கு: 1.
பேரியாழ்;  2.  மகர  யாழ்;  3.  சகோட யாழ்; 4. செங்கோட்டி யாழ்;
மகரயாழ்:  19  நரம்புகளைக்  கொண்டது. நரம்பு. வீணை. தண்ணுமை
(ஒலிகள்) - கருவியாகு பெயர்கள்.                             8
 

488.

பூசலின் எழுந்த வண்டு
   மருங்கினுக்கு இரங்கிப் பொங்க.
மாசு உறு பிறவி போல
   வருவது போவது ஆகி.
காசு அறு பவளச் செங் காய்
   மரகதக் கமுகு பூண்ட
ஊசலில். மகளிர். மைந்தர்
   சிந்தையோடு உலவக் கண்டார்.*
 

மாசு  உறு பிறவிபோல் - குற்ற நிறைந்த பிறவி போல; வருவது
போவது ஆகி
- (மாறி மாறி) வருவதும் போவதுமாகிய; காசு அறு -
குற்றம்  அற்ற;   பவளச்  செங்காய்  -  பவளம்  போலச்  சிவந்த
காய்களையுடைய; மரகதக்  கமுகு  -  மரகதம் போலப் பச்சை நிறப்
பாக்கு மரங்களிலே; பூண்ட - பிணைக்கப்பட்டுள்ள; ஊசலின் மகளிர்
-  ஊஞ்சல்களிலே  பெண்கள்  ஆட;  பூசலின் எழுந்த வண்டு  -
ஆரவாரத்தோடு   மேலே  எழுந்த  வண்டுகள்;   மருங்கினுக்கு  -
அவர்களின்  இடையின்  மென்மைக்காக;   இரங்கிப்   பொங்க  -
இரக்கப்பட்டு ஒலிக்க;  மைந்தர்   சிந்தையோடு   -  ஆண்களின்
மனத்தோடு; உலவக் கண்டார் - ஆடுவதைப் பார்த்தார்கள்.