பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்315

பொருளிலே     செல்வது) போல ஒரு தன்மையுடையனவுமாகி; கண்
புலத்து
-  கண்ணின் பார்வைக்கு; இனைய என்று - இத்தன்மையன
என்று; தெரிவு  இல -  அறிய  முடியாதனவான;  கொட்பு  உறு -
சுழன்று ஓடுகின்ற; கலினப்  பாய்மா  -  கடிவாளம் பூண்டு பாய்ந்து
செல்லும் இயல்புள்ள  குதிரைகள்;  திரியக்  கண்டார்  -  எங்கும்
திரிவதைப் பார்த்தார்கள்.

குதிரைகள்     இயல்பு:  இடையில்  நிற்காமலும்.   வழியைவிட்டு
விலகாமலும்    குதிரைகள்    ஓடும்    இயல்புடையன.   ‘’கூட்டுகிற
முடுக்கிவிட்ட  குயமகன் திகிரிபோல வாள்திறல் தேவதத்தன் கலினமா
திரியுமன்றே’’  - சிந்தா:786. ஞனிகள்-குதிரைகள். ஞானிகளின் அறிவு
ஒன்றாயிருந்தும்    சிறிது    நேரத்திலே    பல    பொருளிடத்தும்
செல்லுதல்போலக்  குதிரை  ஒன்றாயிருந்தும்  சிறிது. நேரத்திலே. பல
இடத்தும்  செல்லும் தன்மையது. மேலோர் நட்பு இடையறாமை: ‘நிறை
நீர  நீரவர்  கேண்மை  பிறைமதி’  -குறள்782. ‘’பெரியவர் கேண்மை
பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்’’ -நாலடியார்:125     12
 

492.

தயிர் உறு மத்தின் காம
   சரம் பட. தலைப்பட்டு ஊடும்
உயிர் உறு காதலாரின்.
   ஒன்றை ஒன்று ஒருவகில்லா.
செயிர் உறு மனத்த ஆகி.
   தீத் திரள் செங் கண் சிந்த.
வயிர வான் மருப்பு யானை
   மலை என மலைவ கண்டார்.
 

காம   சரம்பட- மன்மதனது அம்பு வந்து தாக்குவதால்; (மனம்
கலங்கி) தயிர்  உறு  மத்தின்
-  தயிர்  கடையும் மத்தைப் போல;
ஊடும்
- (புணர்ச்சியின்பத்திற்குப்பின்    ஊடே     விளையாட்டாக
ஒருவரைஒருவர்)  பிணக்குக் காட்டி;  தலைப்பட்டு  -  (ஒருவரோடு
ஒருவர்) புணரத் தொடங்கி; உயிர்  உறு  காதலாரின் - (ஒருவர்க்கு
ஒருவர்)  உயிரைப்  போன்ற  அன்புள்ள  மனைவி  கணவன் போல;
வயிர  வால் மருப்புயானை   
-   வயிரம்   போன்ற   உறுதியும்
வெண்மையான  தந்தங்களும்  உடைய  யானைகள்;  செயிர் உறு -
கோபம் மிகுந்த; மனத்த ஆகி - மனத்தை உடையவனாய்; செங்கண்
தீத்திரள்  
-   (கோபத்தால்)   சிவந்த   கண்கள்  நெருப்புத்திரளை
உமிழும்படி; ஒன்றை  ஒன்று - ஒன்றை ஒன்று விட்டு; ஒருவகில்லா
- நீங்காமல்; மலை என  மலைவ  - இருமலைகள் (ஒன்றோடு ஒன்று
போர் செய்வன) போலப் போர் செய்வதை; சுண்டார் - பார்த்தார்கள்.
 

யானைப்போர்:     அந்  நகர  மைந்தர்களால்  வேடிக்கைக்காக
விடப்பட்ட  யானைகள்  ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்றன. அணி:
உவமை