ஆகும்- ஆக்கத்திற்குரிய; நல்வழி அல்வழி - நல்வழி அல்லாத தீய நெறி; என்மனம் ஆகுமோ - எனது நேர்மையான மனம் செல்லுமோ?; அதற்கு ஆகிய காரணம் - (அப்படியிருக்க என் மனம் இம் மங்கையிடம் காதல் கொண்டு சென்றதற்குப்) பொருந்திய காரணம்; பாகுபோல் மொழி - பாகுபோன்ற இனிய சொற்களையும்; பைந்தொடி - பசும்பொன் தொடியையும் உடைய இந்நங்கை; கன்னியே கும் - (திருமணமாகாத) கன்னிகையே ஆவாள்; இதற்கு வேறு ஐயுறவு இல்லை - (இந்த முடிவுக்கு மாறாக) ஐயப்பட வேண்டியது ஒன்றுமில்லை. தனது மனம் அம் மங்கையிடம் சென்றதால் அவள் திருமணமாகாத கன்னிப் பெண்ணாக இருக்கவேண்டுமென்று இராமன் கருதுகின்றான். சான்றோர்க்குத் தூய மனச்சான்றே அளவுகோல். நல்வழியல்லாத அல்வழி: பிறன் மனைவியை விழைதல். 147 திங்களின் மறைவு |