ஈசன் ஆம் மதி- உயிருக்கு உயிரான சந்திரன் என்னும் கணவன்; ஏகலும் - தம்மைப் பிரிந்து போன பின்பு; ஆசை மாதர் - திசைகளாகிய (அவனுடைய) ஆசை மனைவியர்; பூசுவெள் - (அக்கொழுநனால் பூசப்பட்ட) வெண்மையான; கலவைப் புனை சாந்தினை - கலவையாகிய சந்தனக் குழம்பை; சோகத்தால் - அவனைப் பிரிந்த துயரத்தால்; அழித்தனர் என்ன - அழித்துவிட்டவர்களைப் போல; வீசுகின்ற நிலாச்சுடர் - (சந்திரன் மறைந்த அளவில்) முன்பு (எல்லாத் திசையிலும்) பரவியிருந்த அவனது ஒளியாகிய நிலா; வீந்தது - (ஒளி) ஒழிந்தது. ஆசை மாதர்: திசைகளாகிய மனைவியர்; காதலுடைய மாதர் எனவும் பொருள் தரும். தற்குறிப்பேற்றவணி. 149 கதிரவன் தோற்றம் |