விசை - வேகமும்; ஆடல் - வலிமையும்; பசும்புரவி - பசுமையுடைய குதிரைகளின்; குரம் - குளம்புகள்; மிதிப்ப - மிதித்தலால; உதயகிரி - உதயமலையில்; விரிந்த தூளி - பரவிய செந்துகள் - பசையாக - நனையும்படி; மறையவர் கை - வேதியர்கள் கையால் - நறை மலரும் - தேன் நிறைந்த மலர்களும்; நிறை புனலும் - நிறைந்த அர்க்கிய நீரும்; பரந்து பாய - பரவிப் பாய்ந்திட (அப்பசையான செந்தூளியைக் கொண்டு); வெய்யோன் - சூரியன்; திசை ஆளும் - கிழக்குத் திசையை இடமாகக் கொண்ட. மத கரியை - மத யானைக்கு; சிந்துரம் அப்பிய போல் - சிந்தூரத் திலகத்தை அப்பியது போல; அசையாத நெடுவரையின் - சலனமில்லாத அவ் உதய மலையின்; முகடு தொறும் -சிகரங்களில் எல்லாம்; இளங்கதிர் சென்று - இளமையான சூரிய கதிர்கள் சென்று; அளைந்து - படிந்து; சிவந்த - சிவந்த நிறமாய் விளங்கின. கிழக்கில் உள்ள உயர்ந்த சிகரத்தில் விளங்கும் சூரியக் கதிர்கள். கிழக்குத் திசைக்குரிய யானையின் முகத்தில் தீட்டப்பட்ட சிந்தூரத் திலகம் போன்று இருந்து - தற்குறிப்பேற்றவணி. காலையந்தி வழிபாட்டில் மறையவர் மந்திரத்தின் மூலம் எடுத்துவிடும் அருக்கிய நீர். அந்த வேளையில் மந்தேகர் என்ற அசுரரால் |