| மண்ணும் மணி முழவு அதிர. வான் அரங்கில் நடம்புரி வாள் இரவி ஆன கண்ணுதல் வானவன். கனகச் சடை விரிந்தா லென விரிந்த - கதிர்கள் எல்லாம். |
எண் அரிய- அளத்தற்கு அரிய; மறையினொடு - வேதப் பாடல்களோடு; கின்னரர்கள் - கின்னரர்; இசைபாட - கானம் பாடவும்; உலகம் ஏத்த - உயர்ந்தவர் துதிக்கவும்; விண்ணவரும் - தேவர்களும்; முனிவர்களும் - முனிவர்களும்; வேதியரும் - அந்தணர்களும்; கரம் குவிப்ப - கை கூப்பி வணங்கவும்; வேலை என்னும் - கடல் என்கிற; மண்ணும் மணி முழவு -மார்ச்சனை பூசிய அழகிய மத்தளம்; அதிர - முழங்கவும்; வான் அரங்கின் - வானமாகிய நடன சபையிலே; நடம் புரி - நடனம் ஆடுகின்ற; வாள் இரவி ஆன - ஒளி பொருந்திய சூரியனாகிய; கண் நுதல் வானவன் - நெருப்புக் கண்ணை நெற்றியிலே உடைய உருத்திர மூர்த்தியின்; கனகம் சடை - பொன்னிறமான சடைகள்; விரிந்தால் என - விரிந்தது போல; கதிர்கள் எல்லாம் -(செந்நிறமுள்ள)ஒளிக் கதிர்கள் யாவும்; விரிந்த - எங்கும் பரவின. |
வானத்திலே சூரியனின் கதிர்கள் பரவுதல் வானத்தை அளாவி ஓங்கி உயர்ந்து சிவனது செஞ்சடை விரிதலை ஒத்துள்ளது என்றார்- தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. சிவனது நடனத்துக்கு மிருதங்க நாதம் போலக் கதிரவனின் நடனத்திற்குக் கடல்முழக்கம்; சிவனுக்கு அம்பலம் போலக் கதிரவனுக்கு அம்பரம். மண்: மத்தளத்திற்குத் தடவும் மாப்பசை. 153
இராமன் துயில் நீங்கியபின் முனிவரோடும் தம்பியோடும் சனகனது வேள்விச் சாலையைச் சார்தல் |
633. | கொல் ஆழி நீத்து. அங்கு ஓர் குனி வயிரச் சிலைத் தடக் கைக் கொண்ட கொண்டல். எல் ஆழித் தேர் இரவு இளங் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப. அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கைத் தொல் ஆழித் துயிலாதே. துயர் ஆழி நெடுங் கடலுள் துயில்கின்றானே. |
அங்கு - பாற்கடலில்; கொல் ஆழி - கொல்ல வல்ல சக்கரப் படையை; நீத்து - நீக்கிவிட்டு; ஓர் குனி வயிரச்சிலை - வளைந்து உறுதி வாய்ந்த ஒப்பற்ற கோதண்ட வில்லை; தடக் கைக் கொண்ட - பெரிய கையிலே கொண்டு எழுந்தருளிய; கொண்டல் - மேக நிறத்தவனான இராமன்; ஆயிரம் வாய் - ஆயிரம் முகங்களி |