லும்; மணி விளக்கம் அழலும் - மாணிக்கமான விளக்குகள் ஒளி செய்யப்பெற்ற; சேக்கை - (ஆதிசேடனாகிய) படுக்கையிலே; தொல் ஆழி - பழமையான பாற் கடலில்; துயிலாது - தூங்காமல் (இருந்து); துயர் ஆழி - (பாற்கடலில் பாம்பு அணையில் பள்ளிக் கொள்ளாமல் இராமனாக அவதரித்து) (சீதையைச் சேராமல் உண்டாகிய) மனத்துன்பமாகிய; நெடுங் கடலுள் - பெரிய கடலில்; துயில்கின்றான் - மயங்கிக் கிடக்கின்றன; எல் ஆழித் தேர் - (அவனை) ஒளியுடைய ஒற்றைச் சக்கரத் தேரைக் கொண்ட; இரவி - சூரியன்; இளங்கரத்தால் - மெல்லிய கைகளால்; அடி வருடி - (திருவடிகளை இனிதாகத் தடவிக் கொடுத்து; அனந்தல் தீர்ப்ப - (அந்த இராமனின்) துயில் மயக்கத்தைத் தீர்க்க (அதனால்); அல் ஆழிக் கரை - இரவாகிய கடலின் எல்லையை; கண்டான் - பார்த்தான். பகலவன் உதித்து அவனுடைய கதிர்கள் வெளிப்பட்டு விளங்கிய அளவில் இராமன் துயில் உணர்ந்தான். உயர்ந்தோரைத் துயில் உணர்த்த வேண்டுபவர் தம் மெல்லிய கைகளால் அவர் திருவடிகளை வருடித் துயில் எழுப்புதல். முறையாகும். அதனால் ‘இரவி இளங்கரத்தால் அடிவருடி அனந்தல் தீர்ப்ப’ என்றார். கொண்டல் - உவமையாகு பெயர். 154 |