பக்கம் எண் :

  குலமுறை கிளைத்து படலம்403

11. குலமுறை கிளத்து படலம்

படல     அமைப்பு:   ?சூரிய    குலத்தவர்களது   பெருமையைக்
கோசிகமுனிவன்   சனக   மன்னனுக்குக்     கூறுகின்ற   செய்தியைச்
சொல்லும் பகுதி என்று பொருள்.

படலச் சுருக்கம்:

இராம     லக்குவரின்    குலமரபைக்   கோசிக  முனிவன்  சனக
மன்னனிடம்  மொழிகின்றான்;    தயரதனின்  மகப்பேற்று  வரலாற்றை
உரைக்கின்றான்;  அம்மன்னனின்  குமரர்கள்   கல்வி  கற்ற வரலாற்றை
எடுத்துக்  கூறுகிறான்;  பின்.    இராமன்  வேள்வி  காத்த  திறத்தைச்
சொல்கிறான்;   அந்த   இராமனது   வில்லாற்றலைப்  பாராட்டுகிறான்;
அகலிகைக்கு முன்னயை வடிவத்தைத் தந்த இராமனது பெருமையைப்
பேசுகிறான்.

                 இராம-இலக்குவரின் குலமரபை முனிவன் மொழிதல்
 

637.

‘ஆதித்தன் குல முதல்வன்
   மனுவினை யார் அறியாதார்?
பேதித்த உயிர் அனைத்தும்
   பெரும் பசியால் வருந்தாமல்.
சோதித் தன் வரி சிலையால்
   நிலமடந்தை முலை சுரப்ப.
சாதித்த பெருந் தகையும்.
   இவர் குலத்து ஓர் தராபதிகாண்!
 

ஆதித்தன்    குலம்  -  சூரிய  வமிசத்தில்  பிறந்த;  முதல்வன்
மனுவினை   
-   முதல்    மைந்தனான  மனு  என்னும்  மன்னனை;
அறியாதார்  யார்  
-  (உலகத்தில்)  அறியாதவர்  எவர் (எல்லோரும்
அறிவர்);  பேதித்த  உயிர்  அனைத்தும் -  பல்வேறு  வகைப்பட்ட
உயிர்த்  தொகுதிகள்  எல்லாம்; பெரும்பசியால் வருந்தாமல் - மிக்க
பசியால்  நலியாதபடி; சோதித் தன் வரிசிலையால் - ஒளிமிக்க தனது
கட்டமைந்த  வில்லால்;  நில மடந்தை  -  பூமியாகிய பெண்; முலை
சுரப்ப  
-  முலைப்பால் சுரக்குமாறு; சாதித்த - (செயற்கரிய செயலை)
முயற்சியால் செய்து முடித்த; பெருந் தகையும் - பெருமைக் குணம்