தெவ் வேந்தர்- பகை அரசர்களது; உடல் தோட்ட- உடல்களைத் துளைத்த; நெடுவேலாய் - நீண்ட வேலினை உடைய மன்னனே!;இவர் குலத்தோர் - இம் மைந்தர்களின் குலத்து அரசர்கள்; இரங்கி - (தங்கள் தந்தையின் அசுவமேதக் குதிரை காணாமல் போக) வருந்தி; நெடிய வதை - பெரிய மலைகளை; இடறு ஓட்டம் இனம் - காலால் இடறத் தக்க தேங்காய் ஓடுகளைப் போல; உருட்டி - (வெளியே) புரட்டித் தள்ளி; இவ் உலகம் - இந்த நிலவுலகம்; திடல் கோட்டம் என - திட்டாகவும் மேடாகவும்; கிடக்கும் வகை - இருக்கும்படி; உவரிநீர் - உப்புச் சுவை மிக்க நீரைக் கொண்ட; கடல் தோட்டார்- கடலை(த் தத்தம் வலிமையால்) தோண்டினார்கள்; எனின் - என்றால்; வேறு ஓர் கட்டுரையும் - (இக் குலத்தின் பெருமைக்கு) வேறு நிகழ்ச்சியாக எடுத்துச் சொல்ல ஓர் உறுதி மொழியும்; வேண்டுமோ - வேண்டுமா? (வேண்டா). இதில் சொல்லப்பட்டவர் சகர குமாரர். இவர்கள் தோண்டின பள்ளமே கடலாயிற்று. திடல் தோட்டம் - ஒரு பொருட் பன்மொழி. 8 |