பக்கம் எண் :

  குலமுறை கிளைத்து படலம்413

குலத்தின்    சிறந்த   மைந்தர்களாகிய;  இவர்தமக்கு - இவர்களுக்கு;
உள்ள   
-  இருக்கின்ற;   பரிசு   எல்லாம்  -  சிறந்த  இயல்புகள்
முழுவதையும்;  நயந்து உரைத்து- விருப்பத்தோடு சொல்லி; கரை ஏற
-    (இவர்களின்    புகழ்க்   கடலினது)    கரையைச்   சேர்வதற்கு;
நான்முகற்கும்  
-  பிரமனுக்கும்; அரிது  ஆம் - அரியதாகும்; யான்
அறிந்தபடி
- (இருப்பினும்) அதை நான் அறிந்தபடி; கேளாய் - சிறிது
சொல்லக் கேட்பாயாக.

நான்கு     முகமுடைய  பிரமனுக்கும்  ஓரளவே உணர்த்தக் கூடிய
இராமலக்குவரது  வரலாற்றை ஒரு  முகமுடைய  மனிதனாகிய என்னால்
எவ்வாறு முழுதும் கூற இயலும்?                               13
 

650.‘துனி இன்றி உயிர் செல்ல.
   சுடர் ஆழிப் படை வெய்யோன்
பனி வென்றபடி என்ன.
   பகை வென்று படி காப்போன்.
தனு அன்றித் துணை இல்லான்.
   தருமத்தின் கவசத்தான்.
மனு வென்ற நீதியான்.
   மகவு இன்றி வருந்துவான்;
 

துனி இன்றி-துன்பம் இல்லாமல்; உயிர் செல்ல -  (உலகத்திலுள்ள)
உயிர்கள்   யாவும்  வாழும்படி;  சுடர்  ஆழிப்  படை  - ஒளிமிக்க
திருமாலின்  சக்கரப்படை  போன்ற;  வெய்யோன்  -  சூரியன்; பனி
வென்றபடி  என்ன  
-  பனியை  (எளிதாக ஒழித்து) வெற்றி கொண்ட
தன்மைபோல;  பகை  வென்று  - பகையரசர்களை (எளிதில்) வெற்றி
கொண்டு; படி காப்போன் - உலகத்தைக் காப்பவனும்; தனு அன்றி -
(தன்) கை வில்லை அல்லாமல்; துணை இல்லான் - வேறு துணையாக
(எதையும்  யாரையும்) விரும்பாதவனும்;  தருமத்தின்  கவசத்தான் -
தருமத்தையே  கவசமாகக்  கொண்டவனும்; மனுவென்ற  நீதியான் -
(அரச   தர்ம  சாத்திரங்களை  இயற்றிய)   மனுவையே  நீதிநெறியில்
வென்றவனும்   ஆகிய   தசரதன்;   மகவு இன்றி  வருந்துவான் -
குழந்தைப் பேறு இல்லாமல் மன வருத்தம் உற்றிருந்தான்.
 

சூரியன்     -  மன்னனுக்கும்.   பனி  -  பகைவர்க்கும்.  ஒளி  -
வில்லுக்கும்  உவமையாகும்.  தனுவன்றித்   துணையில்லான் - ஆற்றல்
மிக்க வீரன்.                                               14
 

651.‘சிலைக் கோட்டு நுதல். குதலைச்
   செங் கனி வாய். கரு நெடுங் கண்.
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல்.
   மின் நுடங்கும் இடையாரை.