பக்கம் எண் :

  குலமுறை கிளைத்து படலம்415

தற்கு     - இந்த உலகைக்  காப்பதற்கு;   உரியாரை  - உரிய நல்ல
மைந்தரை;  நீ  பணி  என்று  -  (நான் பெறுமாறு) நீ அருள் செய்க
என்று  கூறி;  அடி  பணிந்தான்  -  (தசரதன்  அக்  கலைக்கோட்டு
முனிவரின்) திருவடிகளை வணங்கினான்.

‘கோசலைதன்     மணிவயிறு வாய்த்தவனே’   (பெருமாள் திரு.8:1).
வயிறு    வாய்த்தல்    -   பண்புடைய    மக்களைக்    கருப்பத்தில்
கொள்ளுதல்.                                              16
 

653.‘அவ் உரை கேட்டு. அம் முனியும்.
   அருள் சுரந்த உவகையன் ஆய்.
“இவ் உலகம் அன்றியே.
   எவ் உலகும் இனிது அளிக்கும்
செவ்வி இளஞ் சிறுவர்களைத்
   தருகின்றேன்; இனித் தேவர்
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு
   உரிய எலாம் வருக” என்றான்.

 

அவ்வுரை கேட்டு- (தசரதன் கூறிய) அந்த வார்த்தையைக் கேட்டு;
அம்  முனியும்  
- அந்த ருசிய சிருங்க முனிவனும்; அருள் சுரந்த -
கருணை   பொழிந்த;   உவகையனாய்   -   மகிழ்ச்சியுடையவனாகி;
(அவ்வரசனை  நோக்கி);  இவ்வுலகம்  அன்றியே - இந்த நிலவுலகம்
ஒன்றை    மாத்திரம்    அல்லாமல்;   எவ்   உலகும்   -  எல்லா
உலகங்களையும்;  இனிது  அளிக்கும் - இனிதாக (எளிதில்) காத்திடும்
படியான;    செவ்வி   இளஞ்சிறுவர்களை   -   அழகிய  இளைய
மைந்தர்களை;   தருகின்றேன்   -   (உனக்கு   நான்  இப்பொழுது)
கொடுத்திடுவேன்; இனி - இனிமேல்; தேவர் வவ்வி நுகர்- தேவர்கள்
(அவிசுகளைப்  பெற்று  உண்ணக்  கூடிய; பெருவேள்விக்கு - பெரிய
யாகத்தைச்  செய்வதற்கு;  உரிய  எலாம்  -  வேண்டிய பொருள்கள்
யாவும்;   வருக   என்றான்   -  (இங்கு)  வந்து  சேரட்டும்  என்று
சொன்னான்.

தருகின்றேன்     -  விரைவும்   தெளிவும்   குறித்து  எதிர்காலம்
நிகழ்காலமாக  மயங்கிற்று.  ‘எவ்வுலகும்  இனிது  அளிக்கும்’ - காத்தல்
தொழிலுக்கு     உரிய     திருமாலின்     அம்சமானவர்    என்பது
அறியப்பெறுகிறது.                                          17
 

654.‘காதலரைத் தரும் வேள்விக்கு
   உரிய எலாம் கடிது அமைப்ப.
மா தவரில் பெரியோனும்.
   மற்றதனை முற்றுவித்தான்;
சோதி மணிப் பொற் கலத்துச்
   சுதை அனைய வெண் சோறு ஓர்