விரிந்திடு தீவினை- (உலகில்) பரவிய பாவங்கள்;செய்த வெவ்விய - பண்ணின கொடிய; தீவினையாலும் - பாவச் செயலாலும்; அருங் கடை இல் - (அறிவதற்கு) அரிய எல்லையில்லாத; மறை அறைந்த - வேதங்களில் சொல்லப்பட்டுள்ள; அறம் செய்த - தருமங்கள் செய்த; அறத்தலும் - தருமத்தாலும்; செங்கனிவாய் - சிவந்த கொவ்வைக் கனி போன்ற வாயையுடைய; கவுசலை என்பாள் - (மூத்தவளான) கவுசலை எனப்படுபவள்; இருங் கடகக் கரதலத்து - பெரிய கடகம் என்னும் அணி அணிந்த கைகளையும்; எழுது அரிய திருமேனி - சித்திரத்தில் எழுத முடியாத அழகிய உடலையுமுடைய; இக் கருங்கடலை - கடல் போன்ற கரிய நிறமுடைய இந்த இராமனை; பயந்தாள் - பெற்றாள். பாவம் அழியவும். புண்ணியம் வளரவும் இராமன் இவ்வுலகில் அவதாரம் எடுத்தான் என்பதை ‘தீவினை செய்த தீவினையாலும் அறம் செய்த அறத்தாலும் பயந்தாள்’ எனக் குறிப்பிட்டார். கடல் - உவமையாகு பெயர். 20 |