ரத மன்னனாகிய; பொறையோடும் தொடர் - பொறுமைப் பண்புடனே பொருந்திய; மனத்தான் - மனத்தையுடையவனுக்கு; புதல்வர் - மைந்தர்கள்; எனும் பெயரே காண் - என்று சொல்லுகின்ற பெயர் ஒன்று மாத்திரமே; உப நயனம் விதி முடித்து - (ஆனால்) வேத விதிப்படி செய்யத்தக்க உபநயனச் சடங்குகளைச் செய்வித்து; மறை ஓதுவித்த - வேதங்களைப் பயிலுமாறு செய்து; இவரை வளர்த்தானும் - இவர்களை வளர்த்தவன்; வசிட்டன் காண் - வசிட்ட முனிவனே ஆவான். தசரதன் நால்வர்க்கும் தந்தை ஆயினும் இக் குமாரர்களின் நன்மையை நாடிச் சகல கலைகளி்லும் வல்லவராகுமாறு வளர்த்தமையால் வசிட்டனே உண்மைத் தந்தையெனத் தக்கான் என்றார். 24 |