பக்கம் எண் :

424பால காண்டம்  

12.கார்முகப் படலம்

பெயர்க்     காரணம்:  கார்முகத்தைப்  பற்றிய  படலம்  எனலாம்.
இராமன்  சிவனது  வில்லை  (சிவதனுசு)  நாணேற்றி  முறித்தமையைக்
கூறும் பகுதி இது. கார்முகம் - வில்.  

படலச்     சுருக்கம்:  இராமன்  வில்லை   நாணேற்றினால்  துயர்
நீங்குமென்று   சனகன்   கூறுகின்றான்.   அந்த     வில்லை  ஏவலர்
அவைக்குக்   கொண்டு  வருகின்றார்கள்.  வில்லைப்    பார்த்தவர்கள்
பலவாறு   பேசுகின்றார்கள். சதானந்த முனிவன் வில்லினது வரலாற்றை
உரைக்கின்றான்.  பின்னர்  விசுவாமித்திரனது   முகக்குறிப்பை அறிந்த
இராமன்  வில்லை  நோக்கி  எழுகின்றான். அந்த  வில்லினை எடுத்து
இராமன்  நாணேற்றுகின்றான்;வில் முறிந்த ஓசையை  யாவரும் கேட்டு
அஞ்சுகின்றனர்.  மிதிலை  நகர  மக்களின்  மகிழ்ச்சி  வெளிப்படுகிறது.
காதல்  நோயால்  நைந்த  சீதைக்கு   அவள்  தோழியான  நீலமாலை
மகிழ்ச்சியான    செய்தியைக்     கூறுகின்றாள்;    சனகன்   உவந்து
கோசிகனிடம்  திருமணம்  குறித்து    வினவுகின்றான்.  அம் முனிவன்
மொழிப்படியே சனகன் தசரதனுக்குத் தூது விடுக்கின்றான்.

இராமன் வில்லை  நாணேற்றினால்  துயர்  நீங்கும்  எனச்  சனகன்
கூறுதல்
 

666.‘மாற்றம் யாது உரைப்பது?
   மாய விற்கு நான்
தோற்றனென் என
   மனம் துளங்குகின்றதால்;
நோற்றனள் நங்கையும்;
   நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல். இடர்க் கடல்
   ஏற்றும்’ என்றனன்.
 
  

(சனகன்     விசுவாமித்திரனை  (நோக்கி)  மாற்றம் யாது- உமது
வார்த்தைக்கு  மாற்றமாக  என்ன; நான்  உரைப்பது - நான் சொல்ல
இருக்கின்றது;  மாய  விற்கு  -  வஞ்சனையமைந்த  இந்த  வில்லை;
கன்னியின்  திருமணத்திற்கு  காரணமாக வைத்தால்;  மனம் - (எனது)
விருப்பம்;   தோற்றனென்   என   -   தோற்றுவிட்ட  தன்மையை
எண்ணும்போது;  துளங்குகின்றது -  மிகக்  கலங்குகின்றது; ஐயன் -
வியத்