பக்கம் எண் :

426பால காண்டம்  

668.உறுவலி யானையை ஒத்த மேனியர்.
செறி மயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்.
அறுபதினாயிரர். அளவு இல் ஆற்றலர்.
தறி மடுத்து. இடையிடை. தண்டில் தாங்கினர்.*

 
  

(விற்சாலையுள்     புகுந்த ஏவலாளர்  தெரிவித்தவாறு)   உறுவலி
யானையை
-  மிக்க  வலிமையுடைய  யானையை; ஒத்த மேனியர் -
ஒத்த  திடமான உடலையுடையவர்களும்; கல் எனத் திரண்ட - மலை
போலத்   திரண்டு;   மயிர்  செறி  தோளினர்  - மயிர்  அடர்ந்த
தோளினரும்;    அளவு   இல்   ஆற்றலர்   -  அளவிடமுடியாத
வல்லமையுடையவர்களுமாகிய;  அறுபதினாயிரர்  -  அறுபதினாயிரம்
வீரர்கள்;  இடை  இடை  -  (அந்த  வில்லின்) நடு இடங்களில்; தறி
மடுத்து  
-  தூண்களை  வைத்து;  தூண்டில்  -  (அத் தூண்களோடு
நெடுகக்  கட்டிய) தண்டுகளில்; தாங்கினர் - (தம் தோள்களில் வைத்து
சுமந்து வந்தார்கள்.                                          3
   

669.நெடு நிலமகள் முதுகு ஆற்ற. நின்று உயர்
தட நிமிர் வடவரைதானும் நாண் உற.
‘இடம் இலை உலகு’ என வந்தது. - எங்கணும்
கடல் புரை திரு நகர் இரைத்துக் காணவே.

 

நெடுநில மகள் -  பெரிய  இப்  பூமிதேவி;  முதுகு  ஆற்ற  -
(நெடுங்காலமாக  அந்த  வில்லைத் தாங்கியதனால் ஏற்பட்ட)  முதுகின்
நோவை  ஆற்றிக்  கொள்ளவும்; நின்று உயர் - நிலைபெற்று ஓங்கிய;
தடம்  நிமிர் வடவரைதானும்
- பெரிய மேரு மலையும்; நாண் உற-
(வில்லின்   தோற்றம்  கண்டு)  வெட்கம்  அடையவும்;  கடல்  புரை
திருநகர்  
-  கடல்போல்  பரந்துபட்ட  மக்கள்;  உலகு  எங்கணும்-
உலகத்திலே  எங்கும்;  இடம்  இலை  என  - இடம் இல்லை என்று
சொல்லும்படி; வந்தது - (அச்சிவ) வில்லானது (சுமக்கப்பட்டு) வந்தது.

உலகத்தவர்   திரண்டு காணுமாறு அச்சிவ வில் ஆயிரக் கணக்கான
பணியாளரால்  தாங்கப்பட்டு  வந்தது.  நெடுங்காலமாகச்   சிவதனுசைத்
தாங்கியதனால்   நோவுற்ற  பூமிக்கு  இப்போது    இளைப்பாற  இடம்
ஏற்பட்டது. நகர் - ஆகு பெயர்.                               4

                            வில்லினைக் கண்டோர் விளம்பியமை
 
670.‘சங்கொடு சக்கரம்
   தரித்த செங் கை அச்
சிங்க ஏறு அல்லனேல்.
   இதனைத் தீண்டுவான்