சங்கொடு சக்கரம்- சங்கு சக்கரங்களை; தரித்த செங்கைய - தாங்கிய செம்மையான கைகளையுடைய; சிங்க ஏறு அல்லனேல்- ஆண்சிங்கம் போன்ற திருமால் (நாணேற்றி) வளையாமல் போனால்; இதனை - இந்தச் சிவதனுசை; தீண்டுவான் ஒருவன் - தீண்டுவதற்கும் தகுதியுள்ள ஒருவன்; எங்கு உளன் - (வேறு) எங்கே இருக்கிறான்?; இன்று - இன்றைய தினம்; இச்சிலை ஏற்றின் - (அத் திருமாலே வந்து) இந்த வில்லை நாணேற்றி வளைப்பானாயின்; மங்கைத்தன் திருமணம் - சீதையின் திருமணமானது; வாழும் - நல்வாழ்வு பெறும்; என்பார் - என்று கூறினர் (சிலர்). சிங்க ஏறு - திருமால். விசுவாமித்திரன் அழைத்து வந்த இச்சிறுவன் திருமாலாயிருப்பின் இது கைகூடுதலும். சீதை நன்மணம் பெறுதலும் கூடும் என்பதாம். ஏனெனில். திருமாலைத் தவிர வேறு யாராலும் .இவ்விலல்லைத் தீண்டுதல் என்பதும் இயலாது. 5 |