(இந்த வில்); திண்நெடு மேருவை - வலிய நெடிய மேருவை; திரட்டிற்றோ - திரட்டிச் செய்ததோ; என்பார் - என்று சொல்பவர்களும்; வண்ணவான் கடல் - அழகிய நீண்ட பாற்கடலை; பண்டு கடைந்த- முன்பு கடைந்த; மத்து என்பார் - மத்தாகிய மந்தர மலையே என்று சொல்பவர்களும்; அண்ணல் வாள் - பெருமை மிகுந்த ஒளியுள்ள; அரவினக்கு அரசனோ - பாம்புகளுக்கு அரசனாகிய ஆதிசேடனோ; என்பார் - என்று கூறுபவர்களும்; விண் இடு - வானத்தில் இடுகின்ற; நெடிய வில் - நீண்ட இந்திரவில்லே; வீழ்ந்ததோ என்பார் - தவறிக் கீழே விழுந்துவிட்டதோ என்று சொல்பவர்களும். வில்லைக் கண்டவர் பலபடியாகப் புனைந்து கூறினர் என்பது - தற்குறிப்பேற்ற அணி. பாம்பு வில்லுக்கு உவமையாதல் - ‘அரவின் தோற்றமே போலும் சிலை’ - சீவக. 2158 7 |