மொய்த்தனர் - (அங்கே) நெருங்கிக் கூடியிருந்த மிதிலை மக்கள்; இன்னணம் மொழிய - இவ்வாறு பலபடியாகச் சொல்லிக் கொண்டிருக்க; மன்னன் முன் - (அதனைச் சுமந்து வந்த பணியாளர்) சனகன் முன்பு; உய்த்தனர்- கொண்டு வந்து; நிலம் முதுகு உளுக்கி - நிலமகளின் முதுகு (சுமை தாங்காமல்) நெளிந்து குழிந்து போகும்படி; கீழ்உற வைத்தனர் - (பூமியின் மேல்) அந்த வில்லை வைத்தார்கள்; கண்ட வேந்தர் - (அந்த வில்லை) நேரே பார்த்த அரசர் யாவரும்; வாங்குநர் யாவரோ - (இந்த வில்லை) வளைக்கப் போகின்றவர் யாரோ? (எவராலும் வளைக்கமுடியாது); எனா - என்று கூறி; கைத்தலம் விதிர்த்தனர் - (அந்த வில்லைத் தொடுவதற்கும் கூசி) கைந் நடுக்கம் எடுத்தனர். பணியாளர் அவ்வில்லை அரசன்முன் வைத்த அளவில் அதைக் கண்ட அரசர் இவ்வில்லை வளைக்க எவராலும் முடியாது எனக் கூறிக் கைந்நடுக்கம் எடுத்தனர் என்பது. 10 சதானந்த முனிவன் வில்லின் வரலாறு உரைத்தல்
|