(அந்தக் குமரன்) இவை மராமரம் என- மராமரம் என்னும்படி; வலிய தோளினான் - வன்மையான தோள்களையுடையவன்; அரா அணை அமலன் என்று - ஆதி சேடனாகிய படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமால்தான் அவதரித்தானோ என்று; அயிர்க்கும் ஆற்றலான் - ஐயுறக் கூடிய ஆற்றல் படைத்தவன்; பெயர் - (அவனுக்கு) அவனது பெயர்; இராமன் என்பது - இராமன் என்பது (அவன்); இளைய கோவொடும் - தம்பியான அரச குமாரனோடும்; பராவ அரு முனியொடும் - அளவிட்டுப் புகழ்வதற்கு அரிய முனிவனோடும்; பதி - (நம்) நகரை; வந்து எய்தினான் - வந்து சேர்ந்தான். தசரதன் மைந்தனான இராமன் தம்பியோடும் விசுவாமித்திரனுடனும் மிதிலை நகர்க்கு வந்தான். 59 |