பூண் இயல் - வாகு வலயங்களை அணிந்த; மொய்ம்பினன் - தோள்களையுடைய அக்குமாரன்; புனிதன் எய்த வில் - புனிதனான சிவன் கைக்கொண்டு எய்த வில்லை; காணிய வந்தனன் - காணும் பொருட்டு வந்துள்ளான்; என்ன - என்று (விசுவாமித்திரன்) சொல்ல; காவலன் ஆணையின் - சனக ராசனின் கட்டளையால்; அடைந்த - அங்கு வந்து சேர்ந்த; வில் அதனை - அந்த வில்லை (வளைத்து); ஆண் தகை - ஆண்மையுள்ளவனான அக்குமாரன்; இனிது நாண் ஏற்றினான் - மிக எளிதாக நாணேற்றினான்; உம்பர் நடுங்கிற்று - வானுலகும் நடுங்கியது. மொய்ம்பு - வலிமை வலிமை;கொண்ட தோளுக்காயிற்று. ‘பூந்தாது மொய்ம்பினவாக’- கலித். 88. 60 |