பக்கம் எண் :

  கார்முகப் படலம்461

கோ முனியுடன்- பெருமை மிக்க முனிவனுடன்; வரு கொண்டல்-
வந்த   மேகம்  போன்றவன்;  என்றபின்  -  என்று  கூறிய  பின்பு;
தாமரைக்   கண்ணினான்   
-  தாமரைக்  கண்ணனான திருமாலைப்
போன்ற ஆற்றல் உடையவன்; என்ற தன்மையால் - என்று சொல்லிய
வகையால்;  ஆம்  அவனே  கொல்  -  (சீதை) அப்பொழுது (கன்னி
மாடத்து  அருகே) கண்ட அவனே போலும்; என்று ஐயம் நீங்கினாள்
-  என்று  தான்  கொண்ட சந்தேகம் (சிறிது) நீங்கப்  பெற்றாள்; வாம
மேகலையினுள்  
-  அழகிய மேகலை அசைய; அல்குல் வளர்ந்தது-
(அவளது) இடைப்பக்கம் பருத்தது.

தோழியின்   வார்த்தையால் வில்லிறுத்தவன் தான்கண்ட ஆடவனே
என்று துணிந்து மனத்திலிருந்த  சந்தேகத்தைச்  சிறிது நீக்கினாள் சீதை
என்பது.                                                  62
   

728.‘இல்லையே நுசுப்பு’ என்பார்.
   ‘உண்டு. உண்டு’ என்னவும்.
மெல்லியல். முலைகளும்.
   விம்ம விம்முவாள்;
‘சொல்லிய குறியின். அத்
   தோன்றலே அவன்;
அல்லனேல். இறப்பென்’ என்று.
   அகத்துள் உன்னினாள்.
 

நுசுப்பு  இல்லையே- (இவளுக்கு) இடையானது இல்லவே இல்லை;
என்பார்
- என்று சொல்பவர் (உடல் பூரித்துள்ள  இப்போது  இடையும்
தோன்ற)   ;  உண்டு  உண்டு  என்னவும் -  (இடை)  இருக்கின்றது
இருக்கின்றது  என்று  சொல்லவும்;  மெல்லியல் - சீதை; முலைகளும்
விம்ம   
-   தனங்களும்  பருக்க;  விம்முவாள்  -  (தானும்)  உடல்
பூரிப்பவளாய்;   சொல்லிய    குறியின்    -    (இவள்)   சொன்ன
அடையாளங்களால்; அவன் - வில்லை முறித்தவன்; அத்தோன்றலே -
(நான்  கன்னி  மாடத்திலிருந்து  கண்ட)   அந்த   ஆடவனேயாவான்;
அல்லனேல்  
-  (அப்படி)  அவனாக  இல்லாவிட்டால்; இறப்பென் -
உயிரை  விட்டொழிப்பேன்;  என்று  அகத்துள்  - என்று மனத்திலே;
உன்னினாள்
- உறுதி கொண்டாள்.  

என்னவும்: இசை நிறை; முலைகளும்; இறந்தது தழீஇய எச்சம்.    63

சனகன் உவந்து கோசிகனிடம் திருமணம் குறித்து வினாவுதல்
 

729.ஆசையுற்று அயர்பவள் அன்னள் ஆயினள்;
பாசடைக் கமலத்தோன் படைத்த வில் இறும்