ஆசை உற்று- காதல் பெருகி; அயர்பவள் - தளர்பவளான சீதை; அன்னள் ஆயினள் - அவ்வாறான நிலையில் இருந்தாள் (அவ்வாறு அது இருக்க); சனகன் - சனக மன்னன்; பாசு அடை - பசுமையான இலைகளையுடைய; கமலத்தோன் - தாமரையில் தங்கும் பிரமன்; படைத்த வில் இறும் - படைத்த வில் இற்று வீழ்ந்த; ஓசையின்- ஓசையைக் கேட்டதால்; பெரியதோர் உவகை - மிக ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து; அக் கோசிகற்கு -அந்த விசுவாமித்திரனுக்கு; ஒரு மொழி கூறுவான் - ஒரு வார்த்தை சொல்லலானான். வில்லை வளைத்தல் என்பது நடைபெறுமா என்று ஏங்கிக் கொண்டிருந்த சனகன் வில் இறுத்த ஓசை கேட்டும் பேருவகை கொண்டான் என்பது. 64 |