பக்கம் எண் :

  கார்முகப் படலம்463

எல்லை இல் உவகையான். ‘இயைந்தவாறு எலாம்
சொல்லுக’ என்று. ஓலையும் தூதும் போக்கினான்
 

மல் வலான்- மற்போரில் வல்ல சனக மன்னன்; அவ் உரை பகர
-   அந்த   மொழிகளைச்  சொல்ல;  மாதவன்  -  விசுவாமித்திரன்;
ஒல்லையில்  அவனும்  
- விரைவில் அத் தசரதனும்; வந்து உறுதல்-
இங்கு  வந்து சேருதல்; நன்று என - நலமாகும் என்று தெரிவிக்கவே;
எல்லையில்  உவகையான்
- எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட சனகன்;
இயைந்த  ஆறு  எலாம்
-  இங்கே  நடந்த  செய்திகளையெல்லாம்;
சொல்லுக  என்று  
-  (தசரத  மன்னனிடம்)  சொல்லுக  என்று கூறி;
ஓலையும் தூதும்
- திருமண ஓலையையும் தூதுவரையும்; போக்கினான்
- (அயோத்திக்கு) அனுப்பி வைத்தான்.

திருமணத்தை   நாளோட்டாமல் விரைவில் செய்யவேண்டு மென்பது
முறையாகும்.     ஆயினும்.     பெற்றோரின்      அனுமதியில்லாமல்
திருமணத்தை நடத்துவது முறையன்று என்று  கருதிய   விசுவாமித்திரன்
‘ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று’ என்றான்.                66