குன்று என உயரிய- மலைபோலத் திரண்ட; குவவுத் தோளினான் - பருத்த தோள்களையுடைய தசரதன்; என்று எதிர் எதிர் - (என்று வசிட்டர் முதலோர் முன்) மறுமொழிகள்; உரைத்து - சொல்லி; நேர் துன்றிய - ஒன்றோடு ஒன்று ஒத்துள்ள; கனைகழல் தூதர் - ஒலிக்கின்ற வீரக் கழலையணிந்த தூதர்கள்; கொள்க என - பெற்றுக்கொள்வார்களாக என்று; பொன்திணி கலங்களும் - பொன்னாலான அணிகலன்களையும்; தூசும் - ஆடைகளையும்; இடைவிடாது போக்கினான் - இடைவிடாது மேலும் மேலும் கொடுக்கச் செய்தான். தன் மைந்தனது வீரச் செயலைக் கேட்ட தசரதன் மகிழ்ச்சிப் பெருக்கால் தூதுவர்க்கு அணிகலன் முதலியவற்றைக் கொடுத்தான் என்பது. 6 தயரதன் ஆணைப்படி வள்ளுவன் மணமுரசு அறைதல் |