உலகு சில் இடமென- உலகம் சிறிய இடத்தையுடையது என்று சொல்லுமாறு; செறிந்த தேர்கள் தாம் - நெருங்கின தேர்கள்; வேந்தரால் - (தம்மேல் ஏறியுள்ள) மன்னர்களால்; புல்லிடு சுடரென - பொருந்திய கதிரவனைப் போல; பொலிந்த - விளங்கின; வேழம் - யானைகள்; எல்லிடு கதிர்மணி - சூரியனின் கதிர்கள் போல ஒளிவிடும் இரத்தினங்கள்; எறிக்கும் ஓடையால் - இழைத்த முகபடாம் அணிந்திருப்பதால்; வில் இடும் முகிலென - வானவில் இடப்பட்ட மேகம்போல; பொலிந்த - விளங்கின. தேர் மேல் ஏறியுள்ள மன்னவர்க்குத் தேர்மேல் விளங்கும் சூரியனும். இரத்தினங்கள் இழைத்துச் செய்யப்பட்ட நெற்றிப் பட்டம் அணிந்த யானைகளுக்கு இந்திர வில்லோடு கூடிய மேகங்களும் உவமையாகும். தேர் உதயமலையாகவும். வேந்தர்கள் சூரியர்களாகவும். யானை முகிலாகவும். ஓடை மின்னலாகவும் உவமை கொள்ளத்தக்கன. 10 |