நுடங்கிய துகில்கொடி- (யானையின்மேல்) அசைந்து ஆடுகின்ற வெண்மையான கொடிகள்; கடம் கலுழ் - மத நீர் ஒழுகுகின்ற; நூழைக் கைம்மலை சேனையை - உள்துளையோடு கூடிய துதிக்கையையுடைய யானைப்படையை; இது கடல் ஆம் என - இது ஒரு கடலாம் என்று கருதி; இடம்பட எங்கணும் - இடம் மறையும்படி (வானத்தில்) எங்கும்; எழுந்த வெண்முகில் - எழுந்த வெண்மையான மேகங்கள்; தடம்புனல் - மிகுதியாக (கடல்) நீரை; பருகிடத் தாழ்வ- குடிக்க இறங்குவனவற்றை; போன்ற - ஒத்திருந்தன. மதநீர் ஒழுகுகின்ற யானைப்படை கடலை ஒத்துள்ளது; அந்த யானைப்படை மேல் அசைந்தாடும் வெண்கொடிகள் அக்கடலின் நீரைப் பருகுமாறு வந்த வெண்மேகங்களை ஒத்துள்ளன. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. 12 |