பக்கம் எண் :

  எழுச்சிப் படலம்501

கவிகையின் நீழல். கற்பின்
   அருந்ததி கணவன். வெள்ளைச்
சிவிகையில். அன்னம் ஊரும்
   திசைமுகன் என்ன. சென்றான்.
 

கற்பின்    அருந்ததி  கணவன்  -  கற்புடைய  அருந்ததிக்குக்
கணவனான  வசிட்ட  முனிவன்; செவி வயின் - (தம்) செவி மூலமாக;
அமுதக்  கேள்வி  -  அமுதம்  போல்  இனிய  நூற்  கேள்விகளை;
தெவிட்டினார்  - தெவிட்டும் அளவிற்கு மிகுதியாகக் கேட்டவர்களும்;
தேவர் நாவின் - தேவர்கள் நாவினால்; அவிகையின் - சுவைக்கின்ற
அவிசைத்  தம்  கைகளால்;   அளிக்கும்   நீரார்   -  கொடுக்கும்
இயல்புடைய   அந்தணர்களும்;  ஆயிரங்கோடி  சூழ  -  ஆயிரவர்
தன்னைச் சுற்றிவர; கவிதையின் நீழல்- குடை நிழலிலே; வெள்ளைச்
சிவிகையின்
 - வெண்மையான  பல்லக்கிலே;  அன்னம்  ஊரும் -
அன்ன ஊர்தியிலே ஏறிச் செல்லும்; திசைமுகன் என்ன - நான்முகன்
போல; சென்றான் - போனான்.

அருந்ததி   கணவனான வசிட்டன் ஆயிரங்கோடி அந்தணர் சூழக்
கவிகையின்  நீழலில்  வெள்ளைப்  பல்லக்கில் நான்முகனைப் போலச்
சென்றான்  என்பது.  ஆயிரங்கோடி -  பலர். வெள்ளைச் சிவிகையில்
செல்லும்  வசிட்டனுக்கு  வெள்ளையன்னத்தில்  செல்லும்  நான்முகன்
ஊர்தியாலும் தொழிலாலும் ஒப்பாவன்.                        70
 

802.

பொரு களிறு. இவுளி பொன் தேர்
   பொலங் கழல் குமரர். முந்நீர்
அரு வரை சூழ்ந்தது என்ன.
   அருகுபின் முன்னும் செல்ல.
திரு வளர் மார்பர். தெய்வச்
   சிலையினர். தேரர். வீரர்.
இருவரும். முனி பின் போன
   இருவரும் என்ன. போனார்.
 

பொரு  களிறு -  போர்   செய்வதற்கான  யானைகளும்;  இவுளி
பொன்தேர்
- குதிரைகளும் அழகிய தேர்களும்; பொலங் கழல் குமரர்
-  பொன்னாலான வீரக் கழல் பூண்ட காளையரும்; முந்நீர் அருவரை
-  கடத்தற்கரிய  மலையைக் கடலானது; சூழ்ந்தது என்ன - சூழ்ந்தாற்
போல;  அருகு  முன் பினும் செல்ல - (தமக்குப்) பக்கமாக முன்னும்
பின்னும்   செல்ல;   திருவளர்   மார்பர்   -   வீரலக்குமி  தங்கிய
மார்பையுடையவர்களும்;    தெய்வச்   சிலையினர்   -   தெய்வீகத்
தன்மையுள்ள    வில்லை   யுடையவர்களும்;    தேரர்   வீரர்   -
தேர்களையுடையவரும்.   வீரர்களுமாகிய;   இருவரும்   -  (பரத  -
சத்துருக்கன்)  இருவரும்; முனிபின் போன - (விசுவாமித்திர) முனிவன்
பின்னே சென்ற; இரு