இந்திர திருவன் - இந்திரனது செல்வம் போன்ற செல்வத்தைக் கொண்டவனாகிய தசரதன்; செல்ல - செல்லுகையில்; மந்திர கீதம் ஓதை - வேத மந்திரங்களாகிய பாட்டோசையும்; வலம்புரி முழங்கும் ஓதை - வலம்புரிச் சங்குகள் முழங்குகின்ற ஓசையும்; அந்தணர் ஆசி ஓதை- அந்தணர்களின் வாழ்த்து ஒலியும்; ஆர்த்தெழு முரசின் ஓதை - ஆரவாரித்து எழுகின்ற முரசங்களின் முழக்கமும்; கந்து கொல் - கட்டுத் தறியை முறிக்கின்ற; களிற்றின் ஓதை - யானைகள் பிளிறும் ஓசையும்; கடிகையர் கவிதை ஓதை - நாழிகைக் கணக்கரின் நாழிகைப் பாடடின் ஓசையும் (ஆகிய இவை); திசைகள் எல்லாம் எழுந்தன - திக்குகள் எங்கும் எழுந்தன. மந்திர கீதம் - சாமகானம். நாழிகைக் கணக்கர் நாழிகையைப் பாடல் வாயிலாகக் குறிப்பர். 78 |