பக்கம் எண் :

  எழுச்சிப் படலம்507

தசரத  மன்னவனின் பார்வை விழும்போது  எல்லாம்  அவனையே
காண்கின்ற மன்னவரின் கைகள் குவிகின்றன என்பது.             79
 

811.

வீரரும். களிறும். தேரும்.
   புரவியும் மிடைந்த சேனை.
பேர்வு இடம் இல்லை; மற்று ஓர்
   உலகு இல்லை; பெயர்க்கலாகா;
நீருடை ஆடையாளும்
   நெளித்தனள் முதுகை என்றால்.
‘பார் பொறை நீக்கினான்’ என்று
   உரைத்தது எப் பரிசு மன்னோ?
 

வீரரும்  -  காலாள்  வீரர்களும்;  களிறும் தேரும் - யானையும்
தேர்களும்;   புரவியும்  மிடைந்த   சேனை  -  குதிரையும்  (என்ற
நால்வகைப்   படையும்) நெருங்கியுள்ள சேனைகளும்; பெயர்வது ஆக
-  (இந்த   இடத்தைவிட்டு)  அப்பாலே  செல்வதென்றாலும்; பேர்வு -
நிலைபெயர்ந்து  செல்வதற்கு; இடம் இல்லை - வேறொரு இடமில்லை;
மற்று ஓர்  உலகு  இல்லை - (?ஏனென்றால்) வேறொரு வெற்றுலகும்
இல்லையாதலால்; நீர்  உடைய  ஆடையாளும்  -  கடலாகிய  நீரை
ஆடையாக  உடைய பூமிதேவியும் (அந்த நாற்படைகளின்  பாரத்தைப்
பொறுக்கமாட்டாமல்);   முதுகை   நெளித்தனள்  -   தன்  முதுகை
நெளித்துக்  கொடுத்தாள்; என்றால் - என்றால் (தசரதன்); பார்பொறை
- பூமியின் சுமையை; நீக்கினான்- போக்கினான்; என்று உரைத்தது -
என்று அறிவுடையோர் கூறியது; எப் பரிசு - எவ்வாறு பொருந்தும்?
 

நால்வகைச்     சேனைகளும்  அசைந்து கொடுக்கவும் இடமில்லை;
மாற்றி  வைக்கவும். மற்றோர்  உலகமில்லை. ஆதலால் சுமை தாங்காது
பூமி நெளிந்தாள் என்றால்  அரசன்  பூமிபாரம் தீர்த்தான் என்று கூறல்
எவ்வாறு பொருந்தும்? என்பது வஞ்சப் புகழ்ச்சியாம்.             80
 

                                  சந்திரசயிலச் சாரலில் தங்குதல்
 

812.

இன்னணம் ஏகி. மன்னன்
   யோசனை இரண்டு சென்றான்;
பொன் வரை போலும் இந்து
   சயிலத்தின் சாரல் புக்கான்;
மன்மதக் களிறும். மாதர்
   கொங்கையும். மாரன் அம்பும்.
தென்வரைச் சாந்தும். நாறச்
   சேனை சென்று. இறுத்தது அன்றே.