படலத்தின் பெயரமைதி: தசரத மன்னனுடன் சென்ற சேனைகள் சந்திரசயிலம் என்னும் மலையைக் கண்டதுபற்றிக் கூறும் பகுதியாக இருப்பதால் இப்பெயர் அமைந்தது. படலத்தின் செய்திச் சுருக்கம்: யானை. தேர்களின் செயல்கள் கூறப்பெறுகின்றன. மகளிர் இளைப்பாறித் துயில் கொண்டார்கள். மைந்தரும் மங்கையரும் திரிந்தார்கள். பட மாடங்களில் வதிந்தார்கள். யானைகளும். குதிரைகளும் வருகின்றன; ஊற்றுநீர் சுரந்தது; வீரர்கள் மாடத்தினுள் நுழைந்தார்கள்; யானைகள் நீரைக் கலக்கின; அட்டிலில் புகை எழுந்தது. சேனைகள் பொலிவுபெற்று விளங்கின. யானைகளின் செயல்கள் |