பக்கம் எண் :

510பால காண்டம்  

இனிய     சொற்கள்  பேசும்  மகளிர்; சிலர்  புயத்தொடும் பூட்ட -
ஆடவர் சிலரின்  புயங்களோடு  அணைக்க;  கோவை ஆர் வடம் -
வானத்தையளாவிய  ஆலமரத்தின்; கொழுங் குவடு ஒடிதர - செழித்த
கிளைகள்  ஒடியும்படி;  நிவந்த  -  ஓங்கியனவும்;  ஆவிவேட்டன -
(தண்ணீர்  பருக) தடாகத்தை விரும்பியனவும்; வரிசிலை அனங்கன் -
கட்டமைந்த   வில்லையுடைய    மன்மதனைப்    போன்ற   வீரனை;
மேல்கொண்ட  -  (தம்)  மேல் கொண்டிருப்பனவுமான; சிலமா - சில
யானைகள்;  தேவதாரத்தும்  - தேவதார  மரங்களிலும்;  சந்தினும் -
சந்தன மரங்களிலும்; பூட்டின - கட்டப்பட்டன.

சந்திரசயில     மலையில் யானைகளின் மேல் இருந்த மகளிர். தம்
தனங்கள்  கணவரின்   தோள்களில்  படுமாறு அவரைத் தழுவியவாறு
கீழே   இறங்கினர்;   அந்த  யானைகள்   மரங்களில்  கட்டப்பட்டன.
சிலேடையணி  -  கொங்கைக்கும்  யானைக்கும்  சிலேடை. தேவதாரு.
சந்தனம்   என்ற    மரங்களில்    யானைகள்   பூட்டப்பட்டனபோல.
பெண்களால்    தனங்கள்  ஆண்களின்  தோள்களில்  பூட்டப்பட்டன
என்ற உவமை தொனிக்கிறது.

தனங்களுக்கு யானைகளும். தோள்களுக்குக் கட்டுத்தறியாக உதவும்
மரங்களும்  உவமை.  தனங்கள்  தம்  காதலர்க்குக் காமவேதனையை
மிகுதியாக   உண்டாக்குவதால்  ‘அனங்கன்  மேற்கொண்ட’  என்றும்.
‘ஆவி வேட்டன’ என்றும் கூறினார்.

முலை  - ‘ஆவி வேட்டன’ - அகிற்புகையை விரும்பின; வரிசிலை
அனங்கன்மேல்     கொண்ட-கட்டமைந்த    கரும்பு    வில்லையும்
மன்மதனையும் தொய்யிலாக மேலே எழுதப்பெற்றன.             1
 

814.

நேர் ஒடுங்கல் இல் பகையினை
   நீதியால் வெல்லும்
சோர்வு இடம் பெறா உணர்வினன்
   சூழ்ச்சியே போல.
காரொடும் தொடர் கவட்டு எழில்.
   மராமரக் குவட்டை
வேரொடும் கொடு. கிரி என
   நடந்தது - ஓர் வேழம்.
 

ஓர் வேழம் - ஒரு யானையானது; நேர் ஒடுங்கல் இல் - நேராக
அடங்காத; பகையினை  -  பகைவரை; நீதியால் வெல்லும் - (அரச)
தந்திரத்தால்   வெல்லுகின்ற;    சோர்வு   இடம்பெறா   -   மனத்
தளர்ச்சியில்லாத; உணர்வினன் - நல்லுணர்வுடைய அரசனது; சூழ்ச்சி
போல
- ஆலோசனை  போல;  காரொடும்  தொடர்  கவடு - மேக
மண்டலத்தை   அளாவும்  கிளைகளையுடைய;  எழில்  மராமரம்  -
அழகிய மராமரத்தின்; குவட்டை - அடிப்பகுதியை; வேரொடும் கொடு
-  வேரோடு பறித்துக்கொண்டு;  கிரிஎன  -  மலைபோல; நடந்தது -
நடந்து சென்றது.